Header Ads



பர்தா அணிந்து முஸ்லிம் பெண்கள் சுதந்திரமாக எங்கும் செல்லலாம் - முதலமைச்சர் ஏக்கநாயக்கா


(ஜே.எம்.ஹபீஸ்)

'பர்தா' என்ற உடலை மறைக்கும் வகையிலான உடையணிந்த முஸ்லிம் பெண்களுக்கு இன்று சுதந்திரமாக எங்கும் சென்று வரக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதுள்ளது போல் நாடளாவிய  வெற்றிகளை ஈட்டக் கூடிய ஒரு மாணவ சமுதாயத்தையும் உருவாக்க நாம் பாடுபடவேண்டும் என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கா தெரிவித்தார்.

(12.11.2012) கண்டி சித்திலெவ்வை மகாவித்தியாலயத்தில் சுமார் 100 இலட்ச ரூபா செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,,

மகிந்த சிந்தனையில் 72ம் பக்கத்தில் கண்டி நகரில் பூரணத்துவம் மிக்க ஒரு முஸ்லிம்  ஆண் பாடசாலை அமைத்துத் தருவதாக கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இப்பாடசாலை கட்டம் கட்டமாக பத்துக் கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அதன் முதலாவது கட்டப் பணிகளே இன்று திறந்து வைக்கப்பட்டடுள்ளது.

2004ம் ஆண்டு மத்திய மாகாண சபையில் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கு முஜ்லிம் அபேட்சகர்களில் எவருமே வெற்றி அடைய வில்லை. இதன் காரணமாக முஸ்லிம் பாடசாலைகளை தமிழ் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வர முயன்றபொழுது மாகாணக் கல்வி அமைச்சராக இருக்கும் எனக்கே அதனைப் பொறுப் பேற்க வேண்டுமெனப் பலர் வேண்டு கோள் விடுத்ததன் அடிப்படையில் அப்nhறுப்பு எனக்குக் கிடைத்தது. இதன் அடிப்படையிலும் இப்பாடசாலையை எந்தவகையிலாவது அபிவிருத்தி செய்வது என்ற முடிவிற்கு நான் வந்தேன்.

அது மட்டுமல்ல முன்னர் உடலை மறைத்துக் கொண்டு முஸ்லிம் பெண்கள் வெளியில் செல்லும் போது சோதனைச் சாவடிகளில் அசௌகரியங்களை எதிர் கொண்டதாகத்தெரிவித்தனர். இன்று அப்படியான ஒரு சூழ் நில இல்லை.  பாரிய சவால் ஒன்று வெற்றி கொள்ளப்பட்டதன் விளைவாக அது நிகழ்ந்தது என்பது நாம் அறிந்த உண்மை.இதே விதம் சகல மாணவர்களும் நாடலாவிய ரீதில் வெற்றி நடை போடும் ஒரு தொகுதியாக மாற்ற நாம் முயற்சிக்க வேண்டு;. இதற்காக நாம் 'நெனோதா' என்ற (அறிவோதயம்) வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.

சற்று முன்னர் மாணவர்கள் 'நெனோதா' பாடலை இங்கு இசைத்தனர். சிங்கள முஸ்லிம் தமிழ் பேதமற்ற சமுகமாக வாழ்வோம் என்பதை பாடிச் சென்றனர் என்றார்.

இவ்வவைபவத்தில் உரையாற்றிய மத்தி மாகாண சபை அங்கத்தவரான அல்ஹாஜ் ரிஸ்வி பாரூக் தெரிவித்ததாவது,

கண்டி நகரை அண்மித்த மாணவர்களைப் பொருத்தவரை சுமார் இருபது அல்லது முப்பது பேர் புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரியில் அனுமதி பெறுகின்றனர். கிங்ஸ்வூட் கல்லூரி மற்றும் றனபிம ரோயல் போன்றவற்றில் பத்திற்கும் குறைவாகவர்களுக்கே அனுமதி கிடைக்கிறது. வித்தியார்த்த, தர்மராஜா போன்றவற்றில் அதனை எதிர்பார்க்கவும் முடியாது. மிகுதிப் பேர் சுமார் நூறு போ'அளவில் எங்கும் நியமனம் கிடைக்காமல் பாதையில் அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆப்படியான நிலைமையில் பெற்றோர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையை நாம் விமர்சிக்க முடியாது. அவர்கள் சர்வதேசப் பாடசாலைகளில் தம்பிள்ளைகளை அனுமதிக்கின்றனர். இதுதான் வஐடா வருடம் நடக்கிறது. எமக்கு வசதியான ஒரு பெண் பாடசாலை இருப்பது போல் இதனை ஆண்பாடசாலையதக மாற்றி அமைத்தால் அப்பிரச்சினை தீர்ந்து விடும்.இது அரசியல் வாதிகளதன எம்மால் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒருபணி என்றார்.

முத்திய மாகாண சபை அங்கத்தவர் எஸ்.எம்.எம்.மர்ஜான், மற்றும் ஊடகத் துறை அமைச்சின் இணைப்பாளர் ஐ.எம்.நிஜாம், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான என்.எம்.எம்.நஸார், எம்.ஜீ.விஜேரத்ன உற்பட இன்னும் பலர் உரையாற்றினர். 















2 comments:

  1. மத உரிமைகள் பாதுக்காக்கப் பட வேண்டும் நாட்டில் பூரண மத சுகந்திரம் (௧௦௦%) இன்னும் எல்லா இடங்களிலும் எaற்படவில்லை என்பதை இது காட்டுகின்றது. ( Religious rights should be protected in the country of complete religious cukantiram (100%) in all of them is that not a rpat.)

    ReplyDelete
  2. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் நாசுக்காக சொல்கிறாராம் முஸ்லிம்களின் உரிமையை எல்லோரும் கதைக்க தொடங்கி விட்டார்கள்...

    ReplyDelete

Powered by Blogger.