பாலமுனை ஹிக்மா வித்தியாலத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவம்
(எஸ்.எல். மன்சூர்)
அக்கரைப்பற்று கல்வி வலயம், அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள பாலமுனை ஹிக்மா வித்தியால மாணவர்கள் தேசிய மட்டத்தில் நடைபெற்ற றக்பி விளையாட்டிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்ற மாணவியையும் பாராட்டி கௌரவம் வழங்கும் விழா இன்று(2012.11.08) பாடசாலையில் 'எம் மண்ணிற்கு மகிமை சேர்த்த மண்ணின் மைந்தர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா – 2012' எனும் பெயரில் அதிபர் அல்.ஹாஜ். ஐ.எம்.பாஹிம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தொழில் அதிபர்களான ஏ.எம். லாபீர் ஹாஜி, ரீ. றமீஸ்காண், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் எஸ்எல். மன்சூர், பாடசாலை அபிவிருத்தி சபையின் செயலாளர் எஸ்.எச். தம்ஜீத் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.
சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ்களும், வெற்றிக் கிண்ணங்களும் கௌரவ அதிதிகளால் இன்று வழங்கப்பட்டன. அத்துடன் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் ஐ.எல்.எம். பாயிஸ் தரம் 5புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் உயர்புள்ளிகளைப் பெற கால்கோளாய் அமைந்த ஆசிரியரும், கவிஞருமான பீ. முஹாஜிரீனுக்கும் அதிதிகளால் பாராட்டும், பரிசில்களும் வழங்கப்பட்டன.
மிகவும் பின்தங்கிய ஒரு பாடசாலையில் தேசிய மட்டத்தில் றக்பி விளையாட்டில் சாதனை படைத்த இப்பாடசாலையையும், ஆசிரியர்களையும், இவர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்திய அதிபர் ஐ.எம். பாஹிம் அவர்களையும் இச்சமும் நன்றி தெரிவித்திருந்தமை பாராட்டும்படியாக அமைந்திருந்தன.
(சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.)
Post a Comment