Header Ads



கண்டியில் நடைபெற்ற முஸ்லிம் சார்பு நிகழ்வில் அமெரிக்க தூதுவர் பங்கேற்பு (படங்கள்)

(ஜே.எம்.ஹபீஸ்)

இலங்கையில் மனிதாபிமானப் பண்புகள் நிறைந்திருப்தை காண முடிவதாக அமெரிக்காவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிச்சேல் சிசன் தெரிவித்தார்.
(28.11.2012) கண்டி முஸ்லிம் இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்டத்திலுள்ள அனாதரவு மற்றும் விஷேட உதவி தேவைப்படும் சிறுவர்களுடனான சந்திப்பொன்றிலே அவர் அதிதயாகக் கலந்து கொண்டார். கண்டியில் இயங்கும் ஆறு இளைஞர் அமைப்புக்கள் இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந்தன. அவர் அங்குமேலும் தெரிவித்ததாவது,

நான் ஒரு இராஜதந்திரியாக முப்பது வருடங்கள் சேவை புரிந்துள்ளேன்.  எனது சேவைகாலத்தில் கிருஸ்தவ இளைஞர் சங்கம், முஸ்லிம் இளைஞர் சங்கம், பௌத்த இளைஞர் சங்கம், இந்து இளைஞர் சங்கம் எனக் கேள்விப்ட்டுள்ளேன். ஆனால் ஆறு இளைஞர் அமைப்பு பற்றி இதுவரை எனக்குத் தெரியாது. இன்றுதான் அதுபற்றிக் கேள்விப் பட்டேன். எனவே 'சிக்ஸ் வைய்ஸ்' என்ற உங்கள் அமைப்பு தொடர்பாக எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 30 வருட யுத்தத்தை சந்தித்த உங்களில் இன்னும் மனிதாபிமானம் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். கண்டிப் பிரதேச மானது மனதுக்கு மிக ரம்யமாக இருக்கறது. உங்கள் உபசரிக்கும் பண்பை வரவேற்கிறேன் என்றார்.

இவ் வைபவத்தில் உரையாற்றிய கண்டி நகர பிதா மகேந்திர ரத்வத்தை தெரிவித்தாவது,

ஆறு இளம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள விடயம் மிகப் புனிதமானது. ஏனெனில் அனாதைகளுக்கு ஆதரவளிப்பத மிகவும் வரவேற்கத் தக்கது என்றார்.

கண்டி வை.எம்.எம்.ஏ இயக்கத்தின் தலைவர் எம்.கஸ்ஸாலி தெரிவித்ததாவது,

இஸ்லாமிய அடிப்படையில் வலது குறைந்தவர்கள் மற்றும்  மனநலம் குன்றியவர்கள் சுவர்க்கவாதிகள். ஏனெனில் அவர்கள் நல்லது கெட்டதை அறியாதவர்கள். முரணத்தின் பின் அவர்கள் சுவர்க்கம் அடைபவர்கள். எனவே வலது குறைந்தவர்களான மனநலம் குன்றியவர்களுக்குச் செய்யும் சேவையானது சுவர்க்வாதிகளுக்கு நாம் செய்யும் சேவையாகும் என்றார்.

அமெரிக்கத் தூதுவர் மனநலம் குன்றிய இச்சிறுவர்களுக்கு அன்பளிப்புக்களையும் வழங்கினார்.  


















1 comment:

  1. YMMA Thalaivar hassaali avarkalukku pothu idatthil pesa vendi irunthaal maarkka vidayatthil kavanam selutthungkal allathu veru evvalavo vidayangal irukkirathu athai pesungkal --//valathu kurainthavarkal sorkkavaasikal enru entha aathaaratthin adippadai il derivittheerkal enru derviyungkal allathu ak karutthai vaabas perungkal///...

    ReplyDelete

Powered by Blogger.