Header Ads



அஸாருதீன் மீதான வாழ்நாள் தடையை நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவு


முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு விதிக்கப்பட்டு இருந்த வாழ்நாள் தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் முகமது அசாருதீன். சூதாட்ட புகாரில் சிக்கியதற்காக கடந்த 2000ம் ஆண்டு அசாருக்கு வாழ்நாள் தடை விதித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இதனை எதிர்த்து அசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று ஆந்திர ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், அசாருதீன் மீதான தடை நீக்கப்படவேண்டும் என தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.