பாலமுனை ஹிதாயா வித்தியாலத்தில் 'வான் சிந்தும் தேன் துளிகள்' (படங்கள்)
(எஸ்எல். மன்சூர்)
தென்கிழக்கின் பாலமுனை ஹிதாயா வித்தியாலத்தில் 'வான் சிந்தும் தேன் துளிகள்' எனும் பேரில் மாணவர், ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு.
இவ்வாண்டு(2012) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் உயர்புள்ளிகள் பெற்று புலமைப்பரிசிலுக்குத் தெரிவான எட்டு மாணவர்களைக் கௌரவிக்கவும், அவர்களுடைய சாதனைக்கு கால்கோளாய் அமைந்த ஆசிரியர்களையும், அதிபரையும் பாராட்டி கௌரவிக்கும் 'வான் சிந்தும் தேன் துளிகள் களிப்பு விழா' இன்று(2012.11.15) காலை 11.30மணியளவில் பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலயத்தின் மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் எம்சி. அப்துஸ் ஸமது தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதியாக அஷ்சேஹ். ஏ.எல்.எம். காசீம் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், வலயத்தின் கணக்காள நாயகம் கே. றிஸ்வி யஹ்ஷர் கௌரவ அதிதியாகவும், விசேட அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம். அபுல் ஹஸன், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்எல். மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்ட இவ்விழாவில் கற்பித்த ஆசிரியர்கள், சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டி பொற்கிழிகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வருகை தந்திருந்த விருந்தினர்களால் கௌரவித்து வழங்கப்பட்டன.
Post a Comment