Header Ads



தலிபான்கள் வெளிப்படுத்திய ரகசியம்..!


தலிபான்கள், தங்கள் ஆதரவாளர்களின், ரகசிய முகவரிகளை, தவறுதலாக, இ-மெயிலில் வெளியிட்டு விட்டனர்.தலிபான் தகவல் தொடர்பாளர், யூசுப் அகமதி என்பவர் வழக்கமாக, தலிபான்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை, தங்கள் ஆதரவு பத்திரிகையாளர்களுக்கு, "இ-மெயில்' மூலம் அனுப்புவார். இப்படி அவர் அனுப்பும் போது, தவறுதலாக, தங்கள் ஆதரவாளர்களின், 400 பேர் விலாச பட்டியலையும், "இ-மெயில்' மூலம் அனுப்பி விட்டார். 

இதனால், தலிபான் ஆதரவாளர்களின் விலாசங்கள் வெட்ட வெளிச்சமாகி விட்டன.ஆப்கானில் பல்வேறு மாகாண கவர்னர்கள், சட்டசபை உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர், தலிபான் ஆதரவாளர்கள் பட்டியலில் இருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.