ஓமானில் மிருகத்தை போன்று நடாத்தப்பட்ட இலங்கை பெண் - செவிபுலனும் இழந்தார்
(ADT)
ஓமான் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரிந்து வரும் இலங்கை பெண்ணொருவர் வீட்டு உரிமையாளரின் சித்திரவதையால் ஒருபக்க செவிப்புலனை இழந்துள்ளார். பணிபுரிந்தமைக்கான சம்பளத்தை கேட்டதால் இலங்கை பணிப்பெண் இவ்விதம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மஸ்கட்டில் உள்ள இலங்கை தொழில் ஆலோசகர் அலுவலக அதிகாரிகள் உடன் விரைந்து இலங்கை பணிப்பெண்ணை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பின்னர் அவர் அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் இலங்கை ஆலோசகர் எம்.எம்.தேசப்பிரிய தெரிவித்தார்.
45 வயதுடைய முலிய நோனா என்ற இலங்கை பணிப்பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. ஒக்டோபர் 18, 2011 தொக்கம் முலிய நோனா மஸ்கட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் தனது வீட்டு உரிமையாளரால் மிருகத்தை போன்று நடாத்தப்பட்டதாகவும் வருடகாலமாக துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கை பெண் நண்பி ஒருவரிடம் தனக்கு ஏற்பட்ட காயங்களை காட்டியதாகவும் இறுதியில் பார்க்கும்போது அவரது கைகளில் வீக்கம் காணப்பட்டதாகவும் நண்பி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வீட்டு உரிமையாளரை அழைத்து இலங்கை ஆலோசகர் கேட்டபோது பெண்ணின் அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
Post a Comment