ஹமாஸுக்கு ஆயுதம் வழங்கினோம் - பெருமைபடும் ஈரானும், எச்சரிக்கும் இஸ்ரேலும்
ஹமாஸ் அமைப்புக்கு ஆயுத விநியோகம் செய்ததை ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் ஒப்புக்கொண்டிருந்தார். “பலஸ்தீன மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள நிதி மற்றும் இராணுவ உதவிகளை அளித்ததையிட்டு நாம் பெருமைப்படுகிறோம்” என சபாநாயகர் அலி லரிஜானி அந்நாட்டு பாராளுமன்ற இணையத்தளத்தில் கூறியுள்ளார்.
நெதன்யாகு எச்சரிக்கை
இதனிடையே காசாவிலிருக்கும் குழுக்களுக்கு ஈரானில் இருந்து ஆயுதங்கள் கடத்தப்படுவதை தடுக்க இஸ்ரேல் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டார். “எமது எதிரிகள் ஆயுதப்பலத்தை அதிகரித்துக் கொள்ளும் வரை இஸ்ரேல் முட்டாள் தனமாக பார்த்துக் கொண்டிருக்காது. தீவிரவாதிகளுக்கு ஆயுதம் செல்வதை தடுக்க இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார்.
ஈரானிடம் இருந்தே தீவிரவாதிகளுக்கு ஆயுதம் கிடைத்து வருகிறது” என்று நெதன்யாகு தனது தொலைக்காட்சி உரையில் கூறினார். யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து காசா வழமைக்கு திரும்பியது.
ஹமாஸ் ஒன்றும் தீவிரவாத அமைப்பு அல்ல அது பலஸ்தீன மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பலஸ்தீன அரசாங்கம்
ReplyDeleteஉலகில் உள்ள மிகக்கொடிய தீவிரவாதம் சியோனிசம் அதற்கு அமெரிக்கா ஆயுதம் முதல்கொண்டு அணித்தையும் வழங்கும் பொது ஏன் ஈரான் ஹமாஸுக்கு உதவக்கூடாது