Header Ads



சிரியாவில் காதுகளை அறுக்கும் கொடூரம் (படம் இணைப்பு)



சிரியாவில் அதிபர் பஷார் அல்- ஆசாத்துக்கு எதிராக கடந்த 1 1/2 வருடங்களுக்கு மேலாக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுக்கு எதிராக போராடும் மக்களை ராணுவம் கொன்று குவிக்கிறது.

மேலும் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கும் அவர்களை ராணுவ வீரர்கள் கொன்று வருகிறார்கள். மேலும் பிணங்களின் உடல் உறுப்புகளை சேதப்படுத்தி மானபங்கம் செய்து வருகின்றனர்.

இதுபோன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் கொன்று குவிக்கப்பட்ட சிறை கைதிகளின் உடல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பிணத்தின் காதுகள் அறுக்கப்பட்டுள்ளன. மேலும் சில பிணங்களின் உடல் உறுப்புகள் வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு ராணுவ வீரர் அறுக்கப்பட்ட சிறை கைதியின் காதுகளை கத்தியுடன் கையில் பிடித்தபடி இது ஒரு நாயின் காது. அதிபர் ஆசாத்தை எதிர்ப்பவர்களுக்கு இது ஒரு பாடம் என சொல்லி ஆணவத்தில் சிரிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

மேலும் பிணங்களை சுற்றி நிற்கும் ராணுவ வீரர்கள் சிலர் அந்த நாய்களின் (கைதிகளின்) காதுகளை என்னிடம் கொடு என எக்காளமிடும் காட்சியும் பதிவாகி உள்ளது.

இந்த கொடூர காட்சிகள் வடமேற்கு லடாகியா மாகாண சிறையில் கடந்த ஜூலை மாதம் எடுக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச போர் விதி முறைகளுக்கு முரணானது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த போர்குற்ற வீடியோ காட்சி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Powered by Blogger.