Header Ads



சிவசேனாவின் தலைவர் பால்தாக்ரேயின் உடல்நிலை கவலைக்கிடம்


இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை கூறிவந்ததுடன், முஸ்லிம்களுக்கு எதிரான பல வன்முறைச் சம்பவங்களின் சூத்திரதாரியுமான சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

இந்நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பால் தாக்கரே உடல் நிலை குறித்து, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், "பால் தாக்கரேக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை; அதேநேரத்தில், ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது. அவரின் உடல் நிலை நன்றாக இல்லை; அவருக்கு உணவு எதுவும் ஏற்கவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து இன்று நள்ளிரவில் மும்பை பந்தரா நகரில் உள்ள மொட்ஸ்ரீ இல்லத்தில் சிகிச்சை பெற்று வரும் பால்தாக்கரே உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவீரமாக கண்காணித்து வருகின்றனர். 

இதனால் பால்தாக்கரே இல்லத்தில் சிவசேனா தொண்டர்கள் குவியத்துவங்கி வருகின்றனர். முன்னதாக பால்தாக்கரே இல்லத்திற்கு முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில், பாலிவுட் நடிகர் அமிதாப் ஆகியோர் நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர். 

No comments

Powered by Blogger.