Header Ads



லெப்டொப் பயன்படுத்தும் ஆண்கள் ஆண்மையை இழப்பது உறுதி - ஆய்வில் கண்டுபிடிப்பு


மடிகணினியை, தொடர்ந்து பயன்படுத்திய, பிரிட்டன் வாலிபரின், விந்தணுக்கள் பாதிக்கப்பட்டுள்ளது, ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனின், ஹாம்ஷயர் பகுதியை சேர்ந்தவர் ஸ்காட் ரீட், 30; இவர் மனைவி லாரா. இவர்களுக்கு ஏற்கனவே, ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தைக்கு முயன்ற போது, லாராவால் கருத்தரிக்க முடியவில்லை.

இது தொடர்பாக இவர்கள், மருத்துவர்களை சந்தித்தனர். சில சோதனைகள் செய்த போது, ஸ்காட்டிடம், போதுமான அளவுக்கு விந்தணு இருப்பது தெரிய வந்தது. ஆனாலும், இவர்களுக்கு இரண்டாவது குழந்தை உருவாவதில், பிரச்னை ஏற்பட்டது. மீண்டும் ஒரு சோதனை செய்து, விந்தணுக்களை சோதித்த போது, விந்தணுக்களின் வால் பகுதி, அதன் தலையை சுற்றிக் கொண்டிருந்தது தெரிந்தது. இதனால், கருமுட்டைக்குள், விந்தணுவால் நீந்தி செல்ல முடியவில்லை. இது தான் கருத்தரிப்புக்கு தடையாக உள்ளது என்பதை, டாக்டர்கள் கண்டுபிடித்தனர். 

ஸ்காட்டின் தினசரி செயல்கள் குறித்து கேட்ட போது, அவர் இரண்டு மணி நேரம், தன் மடி மீது, மடி கணிணியை வைத்து கொண்டு, இணைய தளத்தை பார்த்துள்ளார். மடி கணினியிலிருந்து வெளியாகும் வெப்பம், விந்தணுக்களை பாதித்துள்ளது.மடிகணினியை, மேஜை மீது வைத்து பயன்படுத்தும் படி, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சமையலறையில், வெப்பம் மிகுந்த சூழலில் பணியாற்றும் சமையல் கலைஞர்களுக்கு, இது போன்ற பிரச்னை ஏற்படுவதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.