Header Ads



ஈரான் திண்டாடுகிறது..!


ஆடம்பர பொருட்களை, இறக்குமதி செய்ய ஈரான் தடை விதித்துள்ளது.ஈரான், அணு ஆயுதம் தயாரிப்பதாக சந்தேகிக்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் பெறுவதற்கும் மற்ற நாடுகளுக்கு, அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதனால், ஈரானின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த, வெளிநாட்டு கரன்சிக்கு தற்போது, ஈரானில் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. எனவே, ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலம், வெளிநாட்டு கரன்சிகளை மிச்சப்படுத்த, ஈரான் முடிவு செய்துள்ளது.துணிகள், சாக்லேட் போன்ற தின்பண்டங்கள், அழகு சாதன பொருட்கள், என, 2,000 பொருட்கள், இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடை மூலம், ஈரானுக்கு, ஓராண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை, வெளிநாட்டு கரன்சி மிச்சமாகும்.

இதுகுறித்து, ஈரான் வர்த்தகத் துறை அமைச்சர் ஹமீத் சப்தெல் குறிப்பிடுகையில், "ஆடம்பர பொருள் இறக்குமதி தடை பட்டியலில், கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களும் இடம் பெற்றுள்ளன. தற்போதைய நிலையில், இந்த இரண்டு பொருட்களை மக்களுக்கு கிடைக்க செய்ய எங்களால் முடியவில்லை. எனவே, விரைவில் இந்த இரண்டு பொருட்களை, இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்' என்றார்.

No comments

Powered by Blogger.