Header Ads



சர்வதேச கிரிக்கெட் போட்டியா..? தந்தையின் ஜனாஸா நல்லடக்கமா..?



தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளாமல் அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார் இந்திய அணியின் புதிய பந்துவீச்சாளர் ஜாவேத் கான்.

மும்பை ஏ அணியைச் சேர்ந்த 22 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜாவேத் கான் இங்கிலாந்து அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஜாவேத் கானின் தந்தை முகமது ஜெயிஷ் கான்  இதய அறுவை சிகிச்சை செய்யப் பட்டு  பலனளிக்காமல் மரணமடைந்தார்.

இதைக் கேள்விப்பட்ட ஜாவேத் கான் இரவு முழுவதும் அழுதபடியே இருந்ததுடன், பயிற்சி ஆட்டத்தில் இருந்து விலகவும் முடிவு செய்தார்.

இதனால் போட்டியில் பங்கேற்காமல் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இருந்த நிலையில், சர்வதேச அணிக்கெதிராக தனது மகன் விளையாட வேண்டும் என்பதே ஜெயிஷ் கானின் கடைசி ஆசை என்பதால், உறவினர்களும் பயிற்சியாளர் ராஜு பதக்கும், ஜாவேத்தை தொடர்ந்து விளையாட வற்புறுத்தினர்.

இதையடுத்து, தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்காமல் தனது ஆட்டத்தை தொடர்ந்த ஜாவேத், இங்கிலாந்தின் டிராட் மற்றும் பேர்ஸ்டாவ் விக்கெட்டுகளை வீழ்த்தி தந்தையின் ஆசையை நிறைவேற்றினார் .

No comments

Powered by Blogger.