முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரணியை தடுத்துநிறுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை
நாளை 30-11-2012 நடைபெறவுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கெதிரான எதிர்ப்பு பேரணியை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் நாட்டில் இன மோதல்கள் உருவாவதற்கு இது வாய்ப்பாகி விடும் என ஐ.தே.க.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (ஐ.தே.க) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மையினரைத் தூண்டி விடும் ஏற்பாடாகவே நாளை நடைபெறவுள்ள எதிர்ப்பு பேரணி அமைந்துள்ளது. இதனை ஏற்பாடு செய்துள்ள இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கடந்த ஆறு மாத காலமாக நாட்டின் பல இடங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன.
முஸ்லிம் தமிழ் கடைகளில் சிங்களவர்கள் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடாது. காணிகள் வீடுகளை முஸ்லிம் தமிழர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று பிரசாரம் செய்து வருகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக சுமார் 15 இணையத்தளங்கள் இயங்கி வருகின்றன. இவ் இணையத்தளங்கள் சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடுகின்றன இத்தகைய இணைய தளங்களை அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும். சமூகத்துக்கு எதிரான இணையத்தளங்களைத் தடை செய்யாத அரசு மெளனமாகவே இருந்து வருகிறது.
இதே வேளை அரசாங்கம் தனக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட இணையத்தளங்களை தடை செய்துள்ளது. இனவாத இணையத்தளங்கள் தடை செய்யப்படாமை இனவாத சக்திகளுக்கு ஆதரவளிப்பதாக உள்ளது. எனவே சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்களின் பின்னணியில் அரசியல் இருக்கிறதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லுறவை உருவாக்காமல் இனவாத சக்திகளுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ள அதே நாட்டில் இனமுறுகல்கள் ஏற்பட்டால் பொறுப்பேற்க வேண்டும். நாளை நடைபெறவுள்ள சிறுபான்மையினருக்கு எதிராக எதிர்ப்புப் பேரணியை அரசு தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. vi
.
Post a Comment