Header Ads



யாழ்ப்பாணம் குளத்தடி பள்ளிவாசல் சூழலில் சாவி கொத்து மீட்பு (படங்கள்)

(பா.சிகான்)

யாழ் குளத்தடி பள்ளிவாசல் சூழலை அண்டிய பகுதியில்  சிரமதானத்தில் ஈடுபட்ட பொதுமக்களினால் ஒரு திறப்பு கோர்வை மீட்கப்பட்டு குளத்தடி பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 தினங்களாக சிரமதானப்பணியில் ஈடுபட்ட வேளை பாரிய மரங்கள் கொடிகள் அகற்றப்பட்டன.இதன்போது மேற்படி திறப்புகோர்வையும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சிரமதானத்தை மேற்பார்வை செய்த ஜே 87 கிராம சேவகரான சுல்தான் ஜீனூஸிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அவருடான பள்ளிவாசல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை உரிமையாளர்கள் உரிமை கோரும் பட்சத்தில் அதை உரியவர்களிடம் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.







1 comment:

  1. யாழ் சோனகர் வட்டார வீடுகளையும் கதவுகளையும் உடைத்து எடுத்துச் சென்று விட்டனரே துரோகிகள். வீடுகளில் விட்டுச் செல்லப் பட்ட பொருட்களும் இல்லை. கூரையும் இல்லை, ஓடுகளும் இல்லை, ஏன் சுவரின் கல்லுகளை கூட உடைத்து கலட்டி எடுத்துள்ளார்கள் கயவர்கள் . இந்நிலையில் திறப்பை மட்டும் வைத்துக் கொண்டு என்னத்தைச் செய்வது. துரோகிகளிடமே அவற்றையும் ஒப்படைக்கவும். மாற்றமாக யாழ்பாணத்தில் முஸ்லிம்களின் மியுசியம் ஒன்றைத் திறந்து அங்கே இவ்வாறான பொருட்களை வைக்கவும்.

    ReplyDelete

Powered by Blogger.