Header Ads



நளீம் ஹாஜியார் ஸ்தாபித்த கம்பனியும் சாதனை படைத்தது (படங்கள்)


(அஸ்ரப் ஏ சமத்)

இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்கள் மாபெரும் வர்த்தக சமுகம் என்று பெயர்பெற்றாலும் தற்போதைய நிலையில் முஸ்லீம்கள் இத்துறையில் 3 வீதமே உள்ளனர். அவர்கள் பாரம்பரிய முறையிலான வாங்கி விற்கும்; தொழிலையே இன்றும் செய்துவருகின்றனர்.  அண்மையில்  எல்.எம்.டி என்ற பிசினஸ் மெகசின் இலங்கையில் அதி சிறந்த 100  கம்பணிகளை தெரிவு செய்துள்ளது. அதில் முஸ்லீம்களுக்கு சொந்தமான  ஒரே ஒரு கம்பணியின் பெயர் மட்டுமே உள்ளது. அதுவும் நளீம் ஹாஜியாரின் 'வயிரா' கம்பணியாகும்.
  
பேருவளை ஜாமியா நளீமியாவின் பழைய மாணவர்கள் அமைப்பான (ராபித்தா அன் நளீமியா) காலம் சென்ற கொடை வல்லலும் ஜாமிய நளீமியா மற்றும் இக்ரா தொழில்நுட்பக் கல்லூரி ஸ்தாபகருமான எம்.ஜ.எம். நளீம் ஹாஜியார் நிணைவுச் சொற்பொலிவு கொழும்பில் நடைபெற்றது.

இந் நிகழ்வு  அஷசேக் எம்.சி.எம் றிப்கி தலைமையில் நடைபெற்றது. ஜாமியா நளீமீயா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி, யாக்ஹுத் நளீம், பேராசிரியர் எம்.ஏ.எம் புர்காண் ஜாமியா நளீமியா பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் முஸ்லீம்களின் வர்த்தகத்தில் பங்கு  என்ற தலைப்பில் ஜாமியா நளீமியா பழையமணவரும்  இலங்கை இறைவரித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஷ;சேக் என்.எம்.எம். மிப்லி உரையாற்றினார்.

இறைவரித் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர்ரது மேலும் அவர் உரையாற்றுககையில்,

முஸ்லீம்கள் பெரும்பாண்மையாக வாழும் நகரங்களில் உணவு ஹோட்டல்களையும் சில்லரைக் கடைகளும் ஹாட்வெயார் கடைகளும் வைத்துக்கொள்வதனால் முஸ்லீம் சமுகம் வியாபார சமுகமாக கணிக்கப்படுகின்றது. ஆனால் இவர்கள் யாரோ உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கி விற்கும் பழைய முறைமையை இன்றும்  நம்பி தொழில் செய்கின்றனர். தற்பொழுது சுப்பிரி விக்கிரி என்ற நவீன முறையில் சில்லரைக் கடைகள் மாறியுள்ளது. அந்த தரத்திற்கு நாம்  இன்னும் சொல்லவில்லை. 

ஆனால்  நாம் வர்த்தக சமுகம் என சொல்லுகின்றோம். நம் மத்தியில் உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி செய்யும் கம்பணிகள் எமது முஸ்லீம்கள் மத்தியில் இல்லை. இத்துறையில்  3 வீதமே உள்ளோம். என மிப்லி தெரிவித்தார். அந்த வகையில் நளீம் ஹாஜியார் மாணிக்கற்களை தேடி பட்டை தீட்டி ஏற்றுமதி செய்யும் தொழிலைச் செய்தார். அத்துடன் பயிரா கம்பணியை பெர்து உடைமைக் பப்பிலிக் கம்பணியாக்கினார். இம்முறையை ஏனையோர் கையாலவில்லை.    










2 comments:

  1. اللهم اغفر له وارحمه وارفع درجته في المهديين وأدخله وإيانا في جناتك يا حي يا قيوم

    ReplyDelete
  2. We have got Permanent Residency to Australia, Because of Iqraa Technical Training Institute of Naleem Hajiar (Rahmathullah)

    ReplyDelete

Powered by Blogger.