Header Ads



முஹம்மத் முர்ஸிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் தொடருகிறது



தனக்கு எல்லையற்ற அதிகாரத்தை அளிக்கும், அரசியல் சாசன அறிவிப்பை, எகிப்து அதிபர் முகமது முர்சி வெளியிட்டதை கண்டித்து, நீதிபதிகள், வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

எகிப்து நாட்டை, ஹோஸ்னி முபாரக், கிட்டதட்ட, 30 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது குடும்ப ஆட்சியை எதிர்த்து, மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, முபாரக், ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டார். ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட தேர்தலில், முஸ்லீம் சகோதரத்துவ கட்சியின் தலைவர், முகமது முர்சி அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.முர்சி, அதிபரானது முதல், நீதித்துறைக்கும், இவரது ஆட்சிக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இடைக்கால ராணுவ ஆட்சியின் போது, நடந்த பார்லிமென்ட் தேர்தலில், முறைக்கேடு நடந்ததாக கூறி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், பார்லிமென்ட்டை கலைத்தது.ஆனால், அதிபர் முர்சி, "இந்த பார்லிமென்ட் மீண்டும் செயல்படும்' என, உத்தரவிட்டார். இதனால், அதிபர் மீது, நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், தனக்கு எல்லையற்ற அதிகாரம் அளிக்க, வழி செய்யும், அரசியல் சாசனத்தை முர்சி, கடந்த வாரம் வெளியிட்டார். இதற்கு எகிப்து எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனி நபரிடம் அதிகாரம் குவிந்திருப்பதற்கு, அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எகிப்தில், ஜனநாயகம் மலர போராட்டம் நடத்திய, சர்வதேச, அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான, எல் பராடியும், முர்சியின் இந்த அறிவிப்பை எதிர்த்துள்ளார்.அதிபரின் தன்னிச்சையான, இந்த அறிவிப்புக்கு எதிராக, எகிப்து நாட்டின் நீதிபதிகள் சங்கம், காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், அலெக்சான்டிரியா உள்ளிட்ட நகரங்களில், அதிபருக்கு எதிராக நடந்த, போராட்டங்களில் வன்முறை வெடித்தன.

தற்போது நீதிபதிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால், கெய்ரோவின், புகழ் பெற்ற "தாரிர்' சதுக்கத்தில் போராட்டக்காரர்கள், முகாம்களை அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக போராட்டம் நடந்தது.

அதிபருக்கு, ஆதரவை தெரிவிக்கும் வகையில், முஸ்லீம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள், பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

3 comments:

  1. Jana naayaga aadchi eppothum vetri peraathu athan moolam kilaafath Thai uruvaakka mudiyaathu! Kilaafath etpaddu viddathu ena kooviyavarkal. Alhamthulillah Allahuakbar. Enrallaam arikkai vidda jamaatthukal. Amaippukal. Enge!!!!!!!

    ReplyDelete
  2. சலீம் பாய்! கிலாபத் என்பது திடீர் என்று வானிலிருந்து விழாது.. இவை அனைத்தும் அதற்கான படிகளே !! தூர நோக்கின்றி அவசரப்பட்டு கமெண்டுகளை அடிக்க வேண்டாம்... கிலாபத்தை எதிர்பார்த்து, அதனை நோக்கிய பயணத்தின் அடைவுகளை கண்டு அல்ஹம்துலில்லாஹ்,,, அல்லாஹு அக்பர் என்றுதான் ஒரு முஸ்லிம் சந்தோசப்படுவான் !! நீங்கள் எவ்வாறு எதிர் பார்க்கின்றீர் ???

    ReplyDelete
  3. We should expect like this problem. We can not expect KILAFATH tomorrow or day after. These are some steps forward to KILAFATH. It's better better to keep quit (person like Saleem Mohideen and such a person) and watch what is going on

    ReplyDelete

Powered by Blogger.