புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயுள் அதிகமா..?
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் 1000 பெற்றோரிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதன் மூலம் இப்போது பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒருவரின் ஆயுள் 100 வயது என கணக்கிட்டுள்ளனர்.
தற்போதைய வாழ்க்கை சூழ்நிலை, மருத்துவ வசதி போன்றவைகளால் அவர்களின் ஆயுள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இவர்களால் 70 வயது வரை பணிபுரிய முடியும். 52 வயது வரை ஒரு மாணவனுக்குரிய கடமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் இருக்கும்.
தங்களது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகளை போல் அல்லாமல் 8 வருடங்கள் தாமதமாக திருமணம் செய்து 31 வயதில் குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.
இதுபோன்ற குழந்தைகளை பெறும் பெற்றோர் 1983-ம் ஆண்டு பிறந்தவர்களாகவும், இவர்களின் பெற்றோர் 1957-ல் பிறந்தவர்களாகவும் இருப்பார்கள்.
Post a Comment