புத்தளத்தில் சில பகுதிகளில் சிவப்பு மழை
புத்தளம் - கருவலகஸ்வௌ குடா மதவாச்சிய பிரதேசத்தில் நேற்று மாலை சிவப்பு மழை பெழிந்தாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு மணித்தியாலமாக தொடர்ச்சியாக மழை பெய்ததுடன், பின்னர் சிவப்பு மழை பெழிந்ததாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக நாட்டின் பல பகுதிகளில் சிவப்பு மழை பெய்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
பதியத்தலாவ, செவனகல, மணம்பிட்டிய, ஹிங்குராகொட மற்றும் வெல்லவாய – அதபாங்கல – புபுதுவௌ ஆகிய பிரதேசங்களில் குறித்த மழை பெய்திருந்தது. இது தொடர்பில் பல்வேறு பட்ட தரப்பினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்மூலம், குறித்த சிவப்பு மழையில் அதிகளவான இரும்பு கலந்திருப்பது கண்டறியப்பட்டது. ஒரு மில்லி லீட்டர் நீரில் நூற்றுக்கு 4 சதவீதமான இரும்பு அடங்கியிருந்ததாக உறுதியானது. இதுதவிர, தொழிநுட்ப நிறுவனங்களும் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டதக்கது. sfm
Post a Comment