இலங்கை அனுப்பிய செயற்கைகோளுக்கான நிதி புலிகளுடையதா..?
இலங்கையால் விண்ணுக்கு ஏவப்பட்ட செயற்கைக்கோளுக்கு செலவிடப்பட்ட நிதி மகாராஜாவினதா அல்லது புலிகளுடையதா என தெரிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இலங்கையால் முதல் முறையாக விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் என இலங்கைக்குள் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்ற போதும் சீனா அதனை தாம் அனுப்பும் 18வது செயற்கைக்கோள் என பிரபலப்படுத்தி வருவதாக மங்கள சுட்டிக்காட்டினார்.
சீனாவின் ஒரு ஊடகம் மாத்திரமே செயற்கைக்கோளுக்கு இலங்கையும் பங்கு வகிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வீட்டின் மூலையை மாத்திரம் கூலிக்கு வாங்கிவிட்டு வீடே தனது என பெருமைபேச முடியாது எனவும் அரசு தற்போது பொது மக்களை முட்டாள்களாக்க பொய் கூறி வருவதாகவும் கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மங்கள சமரவீர தெரிவித்தார்.
முழு நாட்டு பொருளாதாரமும் நெருப்பில் எரிகிற நிலையில் மக்கள் பட்டினியில் வாடுகிறபோது ராஜபக்க்ஷக்கள் நாட்டு மக்களுக்கு நட்சத்திரம் காட்டுவதாகவும் வானத்தை காட்டி அனைத்து பிரச்சினைகளையும் மூடி மறைக்க முனைவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் பட்டினிக்காக நிவாரணம் கோரும் போது அதிவேக ஓட்ட பந்தய கார்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் அது பிரான்ஸ் புரட்சியின் போது மக்கள் பாண் கேட்டபோது ராணி ´பாண் தருகிறேன் கேக் சாப்பிடுங்கள்´ என்று கூறியதற்கு சமன் எனவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.
சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் முன்னர் கேட்ட பட்டினிக்குரல் இன்று இலங்கை முழுவதும் கேட்பதாகவும் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாத தாய்மார் பிள்ளைகளை நடுவீதியில் போட்டு செல்லவும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும் செயற்பட்டு வருவதாக மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
He is a Gay, I don't like him, but what he says is absolutely true.
ReplyDelete