ஷிராணி பண்டாரநாயக்கா என்ன செய்யப்போகிறார்..?
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்றில் குற்றப்பிரேரணை (இம்பீட்ச்மென்ட்) இன்று வியாழக்கிழமை ஆளும் கட்சி உறுப்பினர்களால் சமர்பிக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்னஇ பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெனாண்டோ மற்றும் சாந்த பண்டார ஆகியோரால் குறித்த குற்றப்பிரேரணை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்கா தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வாரா அல்லது பாராளுமன்றத்தில் அவருக்கெதிராக மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கு பலத்துடன் அவருடைய பதவி பறிக்கப்படுமா என்பதில் ஆர்வம் மேலோங்கியுள்ளது.
Post a Comment