அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மீது ஈரான் போர் விமானங்கள் தாக்குதல்
அமெரிக்க பன்னாட்டு வளைகுடா கடல் பகுதிகளில் ஆளில்ல விமானங்களை இயக்கி இப்பகுதிகளை கண்காணித்து வருகிறது. கடந்த ஒன்றாம் தேதி சென்ற ஆளில்லா விமானத்தை ஈரானின் போர்விமானங்கள் சுட்டதாக அமெரிக்க கூறியுள்ளது. ஆனால் அந்த விமானம் எந்த பாதிப்பும் அடையாமல் திருப்பப்பட்டது என்றும் அது கூறியுள்ளது.
கடந்த வருடம் இதுபோன்று அனுப்பப்பட்ட ஒரு ஆளில்லா விமானத்தை எல்லை மீறி வந்ததாகக் கூறி ஈரான் பிடித்துவிட்டது. பின்னர் அதை அமெரிக்காவிடம் கொடுக்கவும் மறுத்துவிட்டது. விமானம் தவறுதலாக செயல்பட்டதாக அமெரிக்கா இதற்கு காரணம் கூறியது.
மேலும் இப்பகுதியில் கண்காணிப்பு தொடரும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
Post a Comment