மாணவர்களின் கணிதப்பாட அடைவு மட்டங்களை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை
(எம்.எம்.ஏ.ஸமட்)
தேசிய மட்டப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களின் கணிதப்பாட அடைவு மட்டங்களை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிடுகையில்,
க.பொ.த. சாதாரண பரீட்சைக்குத் தேசியப் பாடசாலைகள் மற்றும் மாகாணப் பாடசாலைகளிலிருந்து தோற்றும் மாணவர்கள் கணிதப்பாடத்தில் குறைந்த அடைவுகளைப் பெறுகின்றமை பரீட்சைப் பெறுபேற்று ஆய்வுகளினூடாக கண்டறியப்பட்டுள்ளது.
மாணவர்களின் கணிதப் பாட அடைவை மேம்படுத்தும் செயற்றிட்டத்தினூடாக, தேசிய பாடசாலைகளிலும், மாகாணப் பாடசாலைகளிலும் இருந்து பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் கணிதப் பாடத்தில் குறைந்த அடைவு மட்டத்தினைப் பெறுகின்றமைக்கான காரணங்களைக் கண்டறிந்து. அவற்றை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இதன் பிரகாரம், 2011ஆம் ஆண்டில்; க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி,; கணிதப் பாடத்தில்; கல்வி வலய மட்டத்தில் 50 வீதத்திலும் குறைவாகச் சித்தியடைந்த மாணவர்கள் கல்வி கற்றும் வலயங்களில் இத்திட்டத்தைச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இத்செயற்றிட்டம் தொடர்பாக மாகாண மற்றும் வலய மட்டத்திலான கணிதப் பாடத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களுடன் கலந்தாலோசனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment