முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் செயலமர்வு
(ஏ.எல்.றபாய்தீன்பாபு)
மனிதநேயப் பணிகளில் பொறுப்புக் கூறும் பங்காளித்துவம் என்ற தொனிப் பொருளில் செயலமர்வொன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கதிரவெளி கிரீன்ஹவிசில் நடைபெற்றது. முஸ்லிம் எய்ட் அரச சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து பங்காளிகளாக செயலாற்றும் மட்டக்களப்பு,திருகோணமலை,அம்பாறை,பொலன்னறுவையைச் சேர்ந்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன் இச்செயலமர்வு நடை பெற்றது
இச் செயலமர்வில் 12 நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றினர். முஸ்லிம் எய்ட் நிறுவனமானது இலங்கையின்; பல பாகங்களிலும் மனிதாபிமான செயற்பாடுகளில் இனமத பேதமின்றி இஸ்லாமிய விழுமியங்களுக்கேற்ப செயற்பட்டு வரும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தின் இலங்கை,இந்திய,பங்களாதேஸ்,பாகிஸ்த்தான் நாடுகளுக்கான இணைப்பாளர் முஷர்ரப்கான் முஸ்லிம் எய்ட் கொழும்பு தலைமை காரியாலய அதிகாரி முகம்மட் முஸம்மில் ,அப்துல் ஆகியோர் பங்கு பற்றி எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றி விளக்கமளித்தனர்.
Post a Comment