மகிந்தோதய திட்டத்தின் மூலம் இலங்கையில் பாரிய கல்வி மாற்றம் ஏற்படும்
(ஜே.எம்.ஹபீஸ்)
மகிந்தோதய திட்டத்தின் கீழ் மத்திய மாகாணத்திலுள்ள 22 பாடசாலைகளுக்கு இன்று நான்கு இலட்ச ரூபா வீதம் பராமரிப்பு நிதி கல்வி அமைச்சரினால் கையளிக்கப்பட்டது.
மகிந்தோதய வேலைத்திட்டத்தின் கீழ் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி செய்படவுள்ளதாகவும் அதில் 409 பாடசாலைகள் அபிவிருந்தி அடைந்து வருவதாகவும் மத்திய மாகாணத்தில் அவ்வாறு உள்வாங்கப் பட்ட 22 பாடசாலைகளுக்கு இன்று நான்கு இலட்ச ரூபா வீதம் நிதி உதவி செய்யப்பட்டன.
பேராதனை கல்வியியற் கல்லூரியில் இடம் பெற்ற வைபவத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றினார். அமைச்சர் பந்துல குணவர்தனா தெரிவித்ததாவது-
இலவசக் கல்வியின் தந்தையான சீ.டப்ளியூ.டப்ளியூ. குன்னங்கரா அவர்களது சிந்தனையில் உதித் மத்திய மாக வித்தியாலய எண்ணக் கருவின் படி அமைக்கப்பட்ட 54 பாடசாலைகள் மூலம் கல்வி பயின்ற பலர் இன்று அரச உயர் பதவிகளில் உள்ளனர். அந்த உயரிய நோக்கம் கொண்ட திட்டம் அக்காலப் பகுதியில் வெற்றி அளித்த போதும்.
இன்றைய சூழ் நிலையில் உயர்தரக் கல்வி பெறும் மாணவர்களில் 53 சதவீதமாவர்கள் கலைத்துறையிலும் 22 சதவீதமாவர்கள் விஞ்ஞானத் துறையிலும் 25 சதவீதமானவர்கள் வர்த்தகத் துறைக்கும் செல்கின்றனர். இதில் வேலை வாய்ப்புக் குறைந் துறையாக கலைத் துறை காணப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு மாவட்த்தில் தாதியர் நியமனத்திற்கு விண்ணப்பம் கோரிய பொது அங்கு ஒருவர் கூட விஞ்ஞானப் பிரிவில் இருக்கவில்லை. எனவே கலைத்துறையிளருக்கு அச் சந்தர்ப்பத்தை வழங்க முன் வந்த போது அதற்குப் பலத்த எதிர்ப்பு வந்தது. இதேபோல் ஈயிரம் பாடசாலைகளுக்கு ஆயிரம் ஆங்கில மொழி மூல பட்டதாரிகளைத் தெரிவு செய்ய முற்பட்ட போது 200 பேர் மட்டுமே நாட்டில் இருந்தனர். இன்னும் 800 வெற்றிடங்கள் ஆங்கில மொழி மூலப் பட்டதாரிகளுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ் நிலையில் வசதி படைத்தவர்கள் சர்வதேசப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை அனுப்பி ஆங்கிலக் கல்வியையும் இலண்டன் பாடத்திட்டத்தின் படி உயர்தரம் இன்றியே பல்வேறு பட்டங்களைப் பெறுகின்றனர்.அவர் 15 அல்லது 20 இலட்ச ரூபா மாத வருமானத்தை ஈட்டுகின்றனர்.
இதன் காரணமாக மேலும் எமது சமபிரதாய கல்வித்திட்டம் பின்னடைந்து செல்கிறது. இவ்வாறான ஒரு சூழ் நிலையில் அன்று கன்னங்கரா முன் வந்தது போல் இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மகிந்தோதய திடத்தின் கீழ் 1000 இடை நிலை பாடசாலைகளையும் 5000 ஆரம்ப பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய முன் வந்துள்ளார். இது இலங்கையிலுள்ள மிகப் பிரபலமான 56 பாடசாலைகளுக்குப் புறம்பாக உள்ளவையாகும்.
எனவே மகிந்தோதய திட்டத்தின் படி 2016ம் ஆண்டில் முன்னர் கூறிய கலைத்துறைக்கான விகிதம் 53 சத வீதத்தில் இருந்து 25 வீதத்திற்கு வீழ்ச்சி அடைவதுடன் விஞ்ஞானத் துறை 22ல் இருந்து 40 சதவீத்திற்கு உயரும். வுர்த்தகத் துறை 25 ல் இருந்து 35 சதவீதமாக உயரும். இது மாணவரின் தவறு அல்ல. அதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தாததே தவறாகும். 2016ம் ஆண்டு இத்திட்டத்திற்காக 6500 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது. தற்போது ஒரு பாட சாலைக்கு வழங்கப் படும் 80 இலட்ச ரூபா மூலம் முழு நாட்டிலும் அனைத்து தேவையையும் பூர்தி செய்யும் ஒரே விதமான கட்டிடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே மகிந்தோதய திட்டத்தின் மூலம் இலங்கையில் பாரிய கல்வி மாற்றம் ஏற்படும் என்றார்.
Post a Comment