காதி நீதிமன்றங்கள் பெண்களின் இரகசியத்தை பேணவில்லை - ரிஸ்வி ஜவஹர்ஷா
(இக்பால் அலி)
தனியானதொரு காழி நீதி மன்றம் ஒன்று இல்லாமல் வீட்டுத் தின்னைகளிலும், மரத்திற்குக் கீழும் வீடுகளிலும் தற்காலிகக் கொட்டில்களிலும் நடைபெற்றன. பெண்களுடைய இரகசியம் பேணக் கூடிய வகையில் காழி நீதி மன்றங்கள் அமையவில்லை. தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு வசதியின்றி அங்குமிங்கும் குந்திக் கொண்டு பால் கொடுப்பதைக் காணக் கூடியதாக இருந்தன. நீதித் துறை அமைச்சின் மூலமாக முஸ்லிம்களுடைய குடும்பவ வாழ்வை மேம்படுத்த காழி நீதித் துறை வரலாற்றில் 68 வருடங்களுக்குப் பிற்பாடு ஒரு சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. என்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷ தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமாவின் ஏற்பாட்டில் குளியாப்பிடிய நீதி மன்ற வலயப் பிரிவில் நிதி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 50 இலட்சம் ரூபா செலவில் குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமாவின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள குளியாப்பிடிய ஹொரம்பாவக் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள காழி நீதி மன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழா குளியாப்பிடிய காழி நீதி மன்றத்தின் நீதவான் அஷ்ஷெய்ஹ் இஸ்ஸாக்லெப்பை காஸிமி தலைமையில் 04-11-2012 நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷh அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அந்தவகையில் இங்கு இந்த காழி நீதி மன்றம் அமையப்பெறுவது என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கொள்ள வேண்டும் அவர் மேலும் தெரிவித்தர்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் முஹமட் தஸ்லிம், குருநாகல் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்ஹ் சித்தீக். சியாம்பலகஸ்கொட்டுவ நூரியா அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்ஹ், முனவர்தீன், திவுரும்பொல் அரபுக் கல்லூரி அதிபர் சியாம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையின் அதிபர் மன்சூர். குளியாப்பிடிய பிரதேச சபை உறுப்பினர் இல்ஹாம், குளியாப்பிடிய முன்னாள் நகர சபை உறுப்பினர் ரியாஸ், ரிதிகம பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ, ஆர். எம். மும்தாஸ் உட்பட கல்வி அதிகாரிகள் உலமாக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் குருநாகல் மாவட்டத்தில் சமாதான நீதவான்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
காலம் கடந்து செயல் பட்டாலும் நல்ல ஒரு செயல் இக்கால கட்டத்துக்கு தேவையான ஒரு கட்டிடம். யார் யார் இந்த விடயத்துக்கு பாடுபட்டார்களோ அவர்கள் எல்லோருக்கும் யா அல்லாஹ் நீ தகுந்த கூலியை கொடுதருல்வாயக அமீன் .....
ReplyDeleteஇச்செய்தியை அனுப்பிய இக்பால் அலி அவர்களுக்கும் இதைப் பதிவு செய்து பிரசுரித்த jaffnamuslim நிறுவனத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்
இஷாக் ரஹீம்
கேகுனகோல்ல
அன்மைக்காலமாக, குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகால சமூக, அரசியல் மேம்பாட்டிற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைச் செய்துவரும் மாகான சபை உறுப்பினர் கெளரவ ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களுக்கும், நாளாந்தம் தேசிய மற்றும் (குறிப்பாக) குருநாகல் மாவட்ட செய்திகளை Jaffnamslim இணையத்தின்வாயிலாக உலகரியச்செய்யும் மதிப்பிற்குரிய இக்பால் அலி(நூலாசிரியர்,நிருபர்,பிராந்திய செய்தியாளர், இதழாசிரியர் ) அவர்களுக்கும் Jaffnamuslim.comக்கும் எமது நன்றிகள் பல...
ReplyDelete