Header Ads



ஓட்டமாவடி சிறாஜ் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா (படங்கள்)


(அனா)

ஓட்டமாவடி சிறாஜ் அரபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நேற்று ஓட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயல் மேல் தளத்தில் இடம் பெற்றது.

அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.அஸ்ரப் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை ஜமாதே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் றஷீத் ஹஜ்ஜூல் அக்பர் கலந்து கொண்டதுடன் கொளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.அலியார் (எம்.ஏ.), கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம்.றிஷ்வி, அகில இலங்கை உலமா சபையின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்க் எஸ்.எம்.அலியார்,  அகில இலங்கை உலமா சபையின் கல்குடாத் தொகுதி தலைவர்; அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.முஸ்தபா மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

1997ம் ஆண்டு தொடக்கம் 2012ம் ஆண்டு வரை பட்டம் பெற்று மௌலவிகளாக வெளியேறிய 61 பேருக்கு மௌலவி 'சிறாஜி' பட்டம் வழங்கப்பட்டதுடன் பட்டமளிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட சிறாஜி மலரின் உரையை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின்  சிரேஷ்ட  விரிவரையாளரும் கவிஞருமான அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) நடாத்தியதுடன் விழாவின் சிறப்புரையை புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் கலாபீடத்தின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.மின்ஹாஜ் நடாத்தினார்.
   







No comments

Powered by Blogger.