இலங்கையில் மலாலா யூசுப்புக்கு ஆதரவாக பௌத்த தேரர் கையொப்பம் திரட்டல்
தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளாகி தற்சமயம் பிருத்தானியாவில் சிகிச்சை பெற்று வரும் பாக்கிஸ்தானின் மலாலா யூசுபாய்க்கு விரைவில் உடல் தேறவேண்டும் என கோரி கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின.
தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தலைமையில், இந்த விடயம் தொடர்பான நிகழ்வு இன்று ஆரம்பமானது. இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு காலி முஸ்லீம் மகளீர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மலால யூசுபாய் துப்பாக்கி தாக்குதலுக்கு உள்ளான ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி மலானா தினமாக பிரகடனப்படுத்த பாக்கிஸ்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெண்களின் கல்விக்காக குரல் எழுப்பிய இவருக்கு அடுத்த சமாதானத்திற்கான நோபல் பரிசினை வழங்குமாறு பரிந்துரைக்கும் கையொப்பம் சேகரிக்கும் முறைமையாகவும் இது அமைவதாக சுட்டிக்காட்டப்பட்;டுள்ளது.
பத்தாயிரம் பேரிடம் கையொப்பம் சேகரிக்கப்படவுள்ள குறித்த ஆவணம் எதிர்வரும் செவ்வாய்கிழமை, கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் தூதுவராயலத்தில் கையளிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். sfm
Post a Comment