நிந்தவூரில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (படங்கள்)
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அரசியல் பிரிவு கிராம மட்டத்தில் இயக்கத்தினை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது. இதன் தொடையல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11.11.2012) பிற்பகல் 4.30 மணியளவில் நிந்தவூரில் இயக்கம் தொடர்பான அறிமுகக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதில் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி), சூறாசபை உறுப்பினர்களான பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், SMM. பஷீர் (B.A) ஆசிரியர், MAHM. மிஹ்ழார், KM. புகாரி, SL.மக்பூல் ஆகியோர் உட்பட நிந்தவூர் பிரதேச உலமாக்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் ஏனைய முஸ்லிம் அரசியற் கட்சிகளிலிருந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எவ்வாறு வேறுபடுகின்றது என்பது தொடர்பாகவும், கடந்த ஆறு வருடங்களில் முஸ்லிம் அரசியலில் எவ்வாறான நம்பிக்கை தருகின்ற மாற்றங்களைக் கொண்டிருக்கின்றது என்பது தொடர்பாகவும் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் பல கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தெளிவுகளை வழங்கினார்.
Post a Comment