அரசாங்கத்தின் பார்வையில் பிரதம நீதியரசர் செய்த குற்றங்கள்
(TN)
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை சபையில் 14 குற்றச்சாட்டுகள்
* அவுஸ்திரேலியாவிலுள்ள இருவர் சொகுசு வீடுகளை வாங்க எங்கிருந்து பணம் வந்தது?
* பிரதம நீதியரசர் சொத்துக்கள் பற்றிய விபரங்களை அறிவிக்கவில்லை.
* 20க்கும் மேற்பட்ட வங்கி வைப்புகள்.
* கணவன் மீதான இலஞ்ச, ஊழல் வழக்கின் ஆவணங்களை பார்க்க அதிகார துஷ்பிரயோகம்.
* தகுதியுள்ளோரை புறக்கணித்து மஞ்சுள திலகரட்ணவுக்கு நியமனம்.
* அரசியல் சாசனத்தை உதாசீனம் செய்து சபாநாயகருக்கு அனுப்பும் தீர்ப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பினார்.
* பெண் நீதவான் திருமதி கமகே பொலிஸ் அதிபரிடம் பாதுகாப்பு கோரியதற்காக அவரை தண்டிக்க எத்தணித்தார்.
* நீதித்துறையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம்.
* பிரதம நீதியரசருக்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
* நீதித்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை சீர்குலைத்தார்.
* துர்நடத்தை அல்லது பிரதம நீதியரசருக்கு தகாத விதத்தில் செயற்பட்டதனால் இந்தப் பதவியை வகிப்பதற்கு தகுதியை இழந்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட பிரேரணை நேற்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட மேற்படி பிரேரணையில் கையெழுத்திட்டுள்ள 117 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பெயர்களும் நேற்றைய ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அவற்றில் ஒன்று அல்லது அதிகமானவை நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு பாராளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கும் பட்சத்தில் பிரதம நீதியரசரை நீக்குவதற்கான பிரேரணையை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கக்கூடிய வகையில் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு கோரியே சபாநாயகரிடம் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக துர்நடத்தை அல்லது பிரதம நீதியரசர் பதவியை வசிப்பவருக்கு தகாதவிதத்திலான நடத்தை உறுதிசெய்யப்படுவதாதலாலும், நீதிமன்றங்களில் வழக்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகக்கூடியதான விடயங்கள் தொடர்பிலான வினா எழுப்புதல்களுக்கு அல்லது கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளாகக் கூடியதான விடயங்கள் தொடர்பில் ஏற்புடையதான மற்றும் ஏற்புடையதாகக் கூடிய விடயங்கள் தொடர்பில் செயலாற்றியுள்ளார் என்பதாலும்,
நீதி நியாயம் வழங்குதல் தொடர்பில் நிர்ப்பந்தங்களை செய்துள்ளார் என்பதாலும், வழக்குத் தரப்பினர் பக்கச்சார்பு மற்றும் பக்கச்சார்பற்ற தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு வாய்ப்புள்ளதான ஏதுக்கள் உருவாகலாம் என்பதாதலாலும் முழுமையாக உச்சநீதிமன்றத்தையும் குறிப்பாக பிரதம நீதியரசர் பதவியையும் அவமதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார் என்றும் அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இதனோடு 14 பிரதான குற்றச்சாட்டுக்களும் அப்பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை சனநாயக்க சோசலிசக் குடியரசின் உச்ச நீதிமன்ற பிரதம நீதியரசர் பதவியிலிருந்து உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதயன்சே ராலஹாமிலாகே ஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்கவை அகற்றுவதற்காக, ஜனாதிபதி அவர்களுக்கு பாராளுமன்றத்தின் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு அரசியலமைப்பின் 107 (2) உறுப்புரையின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் வருமாறு,
1. செலின்கோ கூட்டுத் தொழில்முயற்சிக்குரிய கம்பனிகளான செலின்கோ ஸ்ரீ ராம் கெப்பிற்றல் மனேஜ்மன்ற், கோல்ட்ன் கீ கிறெடிட் கார்ட் கம்பனி மற்றும் பினேன்ஸ் அன்ட் கரண்ரி கம்பனி லிமிடெட் ஆகிய கம்பனிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறையே 262/2009, 191/2009 மற்றும் 317/2009ஆம் இலக்க அடிப்படை உரிமைகள் விண்ணப்பங்கள் தொடர்பிலான வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் பிறிதொரு நீதிபதிகள் குழுவினால் விசாரணை செய்யப்பட்டு வருகையில், மேற்கூறப்பட்ட வழங்குகளை மேற்படி நீதிபதிகள் குழுவிலிருந்து அகற்றி, தமது நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைகளுக்காக எடுத்து, மேற்படி வழக்குகளை விசாரணை செய்கின்ற நீதிபதிகள் குழுவின் தலைமை நீதிபதியாக செயலாற்றி அந்த வழக்குகளின் விடயப்பொருளாகவுள்ள செலின்கோ வீடமைப்பு மற்றும் ஆதனங்கள் கம்பனி என அழைக்கப்பட்ட சிற்றி ஹவுசின் அன்ட் ரியல் எஸ்டேட் கம்பனி லிமிடெட் மற்றும் செலின்கோ கொண்டொமீனியம் லிமிடெட் என அழைக்கப்பட்ட தற்போது டிரிலியம் ரெசிடேன்சீஸ் என அழைக்கப்படும் நிறுவனத்துக்குரிய கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தை, 153 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள 262/2009 ஆம் இலக்க உயர்நீதிமன்ற அடிப்படை உரிமைகள் விண்ணப்பம் தொடர்பிலான வழக்கின் ஆதனங்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வீடமைப்புக் கருத்திட்டத்திலிருந்து 2சீ/எப்2/பி4 ஆம் இலக்க மற்றும் 153/1-2/4 ஆம் ஆதன வரி இலக்க வீட்டை, அவுஸ்திரேலியாவின் மேற்கு அவுஸ்திரேலியா 6016, மவுண்ட் ஹோதோர்ன், எஜீனா வீதி, 127 ஆம் இலக்க இடத்தில் வசிக்கும் ரேணுகா நிரன்ஜிலி பண்டாரநயாக்க மற்றும் கபில ரன்ஜன் கருணாரத்ன ஆகிய இருவராலும் வழங்கப்பட்ட பகிரங்க நொத்தாரிசு கே.பீ அரோஷி பெரேராவின் 823 ஆம் இலக்க விசேட அற்றோனி தத்துவத்தைப் பயன்படுத்தி, ரேணுகா நிரன்ஜிலி பண்டரநாயக்க மற்றும் பகில ரன்ஜன் கருணாரத்ன ஆகிய இருவரினதும் பெயருக்கு கொள்வனவு செய்துள்ளதாதலாலும்,
2. மேலே கூறப்பட்ட ஆதனத்தைக் கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்கின்றபோது, ஈட்டப்பட்ட விதத்தினை வெளிப்படுத்த முடியாத 19,362,500 ரூபா பணத்தொகையை மேற்படி ஆதனத்தைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர், மேற்படி ஆதனத்தை விற்பனை செய்த சிற்றி ஹவுசின் அன்ட் ரியல் எஸ்டேட் கம்பனி லிமிடெட் மற்றும் டிரிலியம் ரெசிடன்சீஸ் கம்பனிக்கு காசாகச் செலுத்தியுள்ளதாதலாலும்,
3. என்.டீ.பி வங்கியின் கொழும்பு 7 தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள கிளையில் 106450013024, 101000046737, 100002001360 மற்றும் 100001014772 ஆகிய கணக்குகளில் 2011 ஏப்ரல் 18 முதல் 2012, மார்ச் 27 வரையிலான காலத்தினுள் ஏறத்தாழ 34 மில்லியன் ரூபா வெளிநாட்டு நாணயத்தை வைப்புச் செய்ததன் பின்னர் அத்தகவலை நீதித்துறை அலுவலர் ஒருவரால் வழங்கப்பட வேண்டிய வருடாந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றில் குறிப்பிடாதிருந்ததாலும்,
4. மேலே கூறிப்பட்ட என்.டீ.பி. வங்கிக் கிளையின் 106450013024, 101000046737, 100002001360, 100001014772, 100002001967, 100101001275, 100110000338, 100121001797 மற்றும் 100124000238 இலக்கங்களை உடைய 9 கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிலும் 20ற்கும் அதிகமான வங்கிக் கணக்குகளைப் பேணிவந்து அத்தகவல்களை நீதித்துறை அலுவலர் ஒருவரால் வழங்கப்பட வேண்டிய வருடாந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்றில் குறிப்பிடாதிருந்ததாலும்,
5. தற்போது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் முன்னேயுள்ள 1994ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றங்கள் தொடர்பிலான வழக்கில் மேற்கூறிய ஷிராணி பண்டாரநாயக்கவின் சட்டரீதியான கணவரான பிரதீப் காரியவசம் சந்தேகநபராகக் காணப்படுவதாலும்,
மேலே கூறப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள மேற்கூறிய நீதிமன்றத்தின் நீதவானை இடம்மாற்றி, ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் அகற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ள நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியை, அரசியலமைப்பின் 111 ஈ (2) ஆம் உறுப்புரையின் பிரகாரம் மேற்கூறிய ஷிராணி பண்டாரநாயக்க ஏற்றிருப்பதாலும்,
மேற்கூறிய நீதிமன்றத்தினால் பேணப்பட்டு வருகின்ற நீதிமன்ற அறிக்கைகள், பதிவேடுகள் மற்றும் பிற ஆவணங்களைப் பரிசோதிக்கின்ற அதிகாரம் நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் தவிசாளர் என்ற வகையில் அரசியலமைப்பின் 111 ஏ(3) ஆம் உறுப்புரையின் கீழ் மேற்கூறிய ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாதலாலும்,
மேலே கூறப்பட்டவாறு ஷிராணி பண்டாரநாயக்கவின் சட்டரீதியான கணவரான பிரதீப் காரியவசத்துக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஏற்புடையதான வழக்கின் காரணமாக பிரதம நீதியரசர் பதவியில் தொடர்ந்தும் செயலாற்றுவதற்கு ஷிராணி பண்டாரநாயக்க தகுதியற்றவர் என்தாலும்,
பிரதம நீதியரசர் பதவியில் இவர் தொடர்ந்தும் செயலாற்றுவதன் காரணமாக நீதி நிருவாகச் செயலாற்றுவதன் காரணமாக நீதி நிருவாகச் செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு தடையாயிருப்பதாலும் மற்றும் நீதி நிருவாகம் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகள் அதன் மூலம் மீறப்படுவதாலும் மற்றும் நீதி நிறைவேற்றப்படுதல் மட்டுமன்றி நீதி நிறைவேற்றப்படுவதென்பது புலப்படக்கூடியதாயிருத்தல் வேண்டுமென்பதாலும்,
6. முதனிலை நீதிமன்றங்களின் மூப்புநிலை அலுவலர்களிலிருந்து நிதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் நியமிக்கப்படுதல் வேண்டுமென அரசியலமைப்பின் 111 ஏ உறுப்புரையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் போது, கெளரவ (கலாநிதி) (திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகே ஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் என்ற வகையில் நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் தவிசாளராக அவரது பதவி நிலையிலிருந்து செயலாற்றி, முதனிலை நீதிமன்றங்களில் தகுதிவாய்ந்த மூப்புநிலை நீதித்துறை அலுவலர்கள் உள்ளபோது நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக அவ்வாறல்லாததொரு அலுவலரான திரு. மஞ்ஜூல திலகரத்னவை நியமித்தததன் மூலம் நீதித்துறை அலுவலர்களது மூப்புரிமை கவனத்திற்கொள்ளப்படாததன் ஊடாக நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் தவிசாளர் என்ற வகையில் செயலாற்றி அரசியலமைப்பின் 111 ஏ ஆம் உறுப்புரையை மீறியுள்ளாராதலாலும்:
7. 2/2012 மற்றும் 3/2012 ஆம் இலக்க உயர் நீதிமன்ற விசேட தீர்ப்புகள் தொடர்பில் அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் கீழான அரசியலமைப்பு நியாயாதிக்கத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றின் பிரதி அதே நேரத்தில் பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கு ஒப்படைக்கப்படுதல் வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளபோது, நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவொன்றின் பிரதியை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு ஒப்படைத்தலானது அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளை நிறைவு செய்வதாகும் என்பதாக மேற்கூறிய கெளரவ (கலாநிதி) திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகே ஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்க நீதிமன்றத்தில் விசேட தீர்ப்பொன்றை வெளியிட்டதன் மூலம் அரசியலமைப்பின் 121(1)ம் உறுப்புரையைக் கவனத்திற் கொள்ளாது மற்றும் / அல்லது முரணாகச் செயலாற்றி உள்ளாராதலாலும்
8. 5/91, 6/91, 7/91 மற்றும் 13/91 ஆம் இலக்க உயர்நீதிமன்ற விசேட தீர்ப்புகளின் போது உயர்நீதிமன்றதால் வரைவிலக்கணப் படுத்தப்பட்டுள்ளவாறு அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாய செயல் நடைமுறைக்கு இணங்கச் செயலாற்றுதல் வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், மேலே கூறப்பட்ட கெளரவ (கலாநிதி) திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகே ஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்க மேற்கூறிய உறுப்புரையை மிறியுள்ளாராதலாலும்,
9. கெளரவ (கலாநிதி) திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகேஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்க உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது அவரது நியமனத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட சனாதிபதி சட்டத்தரணி எட்வட் பிரென்சிஸ் விலியம் சில்வா மற்றும் மேலும் மூவர் எதிர் ஷிராணி பண்டாரநாயக்க (1992 இலங்கை புதிய சட்ட அறிக்கை 92) அடிப்படை உரிமை மீறல் வழக்கின் போது உயர்நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட பெரும்பான்மைத் தீர்ப்பைக் கவனத்திற் கொள்ளாது உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின் மேற்கூறிய தீர்ப்புக்கு எதிராகச் செயலாற்றியுள்ளாராதலாலும்.
10. உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆவதற்கு முன்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் விரிவுரையாளராக இருந்த போது கெளரவ (கலாநிதி) திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகே ஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்கவின் கட்டுரையொன்றை வெளியிட்டிருந்த Ground view எனப்படும் ஊடக வெளியீட்டுப்
பிரிவு உரித்தான மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் எனப்படும் நிறுவனத்தினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 02/2012 ஆம் இலக்க உயர்நீதிமன்ற விசேடத் தீர்ப்பு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளாராதலாலும்,
11. பிரதம நீதியரசர் பதவியை வகிக்கின்றவரும் அதனூடாக அரசியலமைப்பின் பிரகாரம் நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியை வகிக்கின்றவருமான கெளரவ (கலாநிதி) திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகேஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்க உயர்நீதிமன்ற நீதிபதிப் பதவிக்கு நியமிக்கப்படுவதிலுள்ள தகைமையை ஆட்சேபித்த, சனாதிபதி சட்டத்தரணி எட்வட் பிரென்சிஸ் விலியம் சில்வா மற்றும் மேலும் மூவர் எதிர் ஷிராணி பண்டாரநாயக்க (1992 இலங்கை புதிய சட்ட அறிக்கை 92) வழக்கின் போது மேற்கூறிய கெளரவ (கலாநிதி) திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகே ஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்கவின் நியமனத்திற்கு எதிராக நீதவான் கருப்புகே பீட்டா ஆன் வர்ணசூரிய சுவர்ணாதிபதியின் சகோதரரான சட்டத்தரணி எல்.சீ.எம். சுவர்ணாதிபதி என்பவர் மனுவொன்றைச் சமர்ப்பித்ததன் காரணமாக, மேற்கூறிய கெளரவ (கலாநிதி) திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகேஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்க மேற்கூறிய நீதிவான் குருப்புகே பீட்டா ஆன் வர்ணகுலசூரிய சுவர்ணபதிக்கு தொந்தரவு செய்துள்ளாராதலாலும்,
12. பிரதம நீதியரசர் பதவியை வகிக்கின்றவரும் அதனூடாக அரசியலமைப்பின் 111ஈ(2) ஆம் உறுப்புரையின் பிரகாரம் நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியை வகிக்கின்றவருமான கெளரவ (கலாநிதி) திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகே ஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்க அரசிலமைப்பின் 111ஏ ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ள அவரது நியாயாதிக்கத்தைத் தாண்டிச் செயலாற்றி, நீதிவான் (திருமதி) ரங்கனீ கமகேவுக்கு தனது சட்ட ரீதியிலான உரிமைகளைச் செயற்படுத்துவதற்கு முன்னர் நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுமாறு கட்டளையிட்டதன் மூலம் நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திரு. மஞ்ஜூல திலகரத்ன இவரைத் துன்புறுத்தியமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கான நீதிவான் ரங்கனீ கமகேயின் சட்டத்தின் உதவியை நாடுவதற்குள்ள உரிமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாதலாலும்,
13. மேற்கூறிய கெளரவ (கலாநிதி) திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகே ஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் என்ற வகையிலும் அதனூடாக அரசியலமைப்பின் 111ஈ(2) ஆம் உறுப்புரையின் பிரகாரம் நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் தவிசாளர் என்ற வகையிலும் செயலாற்றி தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, நீதிவான் (திருமதி) ரங்கனீ கமகேவுக்கு பொலிஸ் பாதுகாப்பை பெறுவதற்கு முன்னர் நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுமாறு கட்டளையிட்டு, அவர் பொலிஸ் பாதுகாப்பை பெறுவதற்கான சட்ட ரீதியான உரிமையைத் தடுத்துள்ளாரா தலாலும்,
14. தனது சட்ட ரீதியான உரிமையைச் செயற்படுத்தி நீதிவான் (திருமதி) ரங்கனீ கமகே பொலிஸ்மா அதிபரிடம் பாதுகாப்புக் கோரியமை தொடர்பில் ஏன் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படாதிருத்தல் வேண்டும் என்பது பற்றி மேற்கூறிய நீதிவான் திருமதி) ரங்கனீ கமகேயிடம் விடுப்புக்கான காரணங்களை வினவி நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் தவிசாளர் என்ற வகையில் செயலாற்றி கெளரவ (கலாநிதி) திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகே ஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்க நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஊடாக கடிதமொன்றை அனுப்பியுள்ளாராதலாலும்,
மேலே கூறப்பட்டுள்ளவாறு செயலாற்றியதன் மூலம்,
i. துர்நடத்தை அல்லது பிரதம நீதியரசர் பதவியை வகிப்பவருக்கு தகாத விதத்திலான நடத்தை உறுதி செய்யப்படுவதாதலாலும்,
ii. நீதிமன்றங்களில் வழக்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகக் கூடியதான விடயங்கள் தொடர்பிலான வினாவெழுப்புதல்களுக்கு அல்லது கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளாகக்கூடியதான விடயங்கள் தொடர்பில் ஏற்புடையதான மற்றும்/ அல்லது ஏற்புடையதாகக்கூடிய விடயங்கள் தொடர்பில் செயலாற்றியுள்ளாராதலாலும்,
iii. நீதி நியாயம் வழங்குதல் தொடர்பில் நிர்ப்பந்தங்களைச் செய்துள்ளாராதலாலும்,
iv. வழக்குத் தரப்பினர்கள் பக்கச் சார்பு மற்றும் / அல்லது பக்கச்சார்பின்மை தொடர்பிலான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு வாய்ப்புள்ளதான ஏதுக்கள் உருவாகலாமென்பதாதலாலும்,
முழுமையாகவே உயர்நீதிமன்றத்தையும் குறிப்பாக பிரதம நீதியரசர் பதவியையும் அவமதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.
ஆதலால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள துர்நடத்தை குற்றச்சாட்டுகளின் காரணமாக மேற்படி துர்நடத்தைக் குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரணை நடத்தி மேற்படி குற்றச்சாட்டுகளில் ஒன்று அல்லது அதற்கு அதிகமானவை எண்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு பாராளுமன்றத்தில் அறிக்கையிடும் பட்சத்தில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம நீதியரசர் பதவியிலிருந்து கெளரவ (கலாநிதி) திருமதி) உபதிஸ்ஸ அத்தபத்து பண்டாரநாயக்க வாசல முதியன்சே ராலஹாமிலாகேஷிராணி அங்சுமாலா பண்டாரநாயக்கவை அகற்றுவதற்கானதொரு பிரேரணையை ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கக்கூடியவாறு தெரிகுழுவொன்று நியமிக்கப்படுதல் வேண்டுமென, மேலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அரசிலமைப்பின் 107(3)ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டியதான 107(2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரமும், 78அ ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரமும் பிரேரிக்கின்றோம்.
இந்தப் பிரேணையில் கைச்சாத்திட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் வருமாறு, ரன்ஜித்.டி. சொய்சா, பழனி திகாம்பரம், டக்ளஸ் தேவானந்தா, மொஹான் லால் கிரேரு, வீ.எஸ். இராதாகிருஷ்ணன், எஸ்.பீ. திசாநாயக்க, ரெஜினோல்ட் குரே, நந்தமித்ர ஏக்கநாயக்க, வீரகுமார திஸாநாயக்க, கீதாஞ்ஜன குணவர்த்தன, மஹிந்த அமரவீர, முத்து சிவலிங்கம், லசந்த அளகியவண்ண, சனத் ஜயசூரிய, வசந்த பெரேரா, ஜகத் பாலசூரிய, ஏ.எச்.எம்.அஸ்வர், டலஸ் அழகப்பெரும, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்திராதேவி வன்னிஆராச்சி, துலீப் விஜேசேகர, ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, மாலனீ பொன்சேகா, தயாசிறி திசேரா, விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஏ.எல்.எம். அதாஉல்லா, எம்.கே.டீ.எஸ். குணவர்த்தன, பந்துல குணவர்த்தன, நிர்மல கொத்தலாவல, விஜித பேருகொட, ஜானக வக்கும்புர, எச்.ஆர். மித்ரபால, லலித் திசாநாயக்க, விஜய தஹநாயக்க, சரண குணவர்த்தன, லக்ஷ்மன் செனவிரட்ன, அசல ஜாகொடகே, சாலிந்த திஸாநாயக்க, ரோஹித்த அபேகுணவர்த்தன, கமலா ரணதுங்க, ஜயரத்ன ஹேரத், ரோஹன திநாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, ஏ.பி. ஜகத் புஷ்பகுமார, அருந்திக்க பர்னாந்து, சாந்த பண்டார, ரமேஷ் பத்திரண, விக்டர் அன்டனி, சரத் குமார குணரத்ன, எஸ்.எம்.சந்திரசேன, மனுஷ நாணயக்கார, ஜனகபண்டார தென்னக்கோன், மில்ரோய் பெர்னான்டோ, லொஹான் ரத்வத்தே, ஹ¥னைஸ் பாறூக், உபேக்ஷ்ஷா சுவர்ணமாலி, சுமேதா ஜீ. ஜயசேன, பியங்கர ஜயரத்ன, ஹேமால் குணசேகர, தேனுக விதானகமகே, குமார வெல்கம, ஜானக பண்டார, விதுற விக்ரமநாயக்க, ஏ.ஆர்.எம். அப்துல் காதர், ருவன் ரணதுங்க, பீலிக்ஸ் பெரேரா, தாராநாத் பஸ்நாயக்க, ரோஹன புஷ்பகுமார, பிரேமலால் ஜயசேகர, சனீ ரோஹன, கொடிதுவக்கு, நெரன்ஜன் விக்ரமசிங்க, சீ.பீ. ரத்நாயக்க, துமிந்த திசாநாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, காமினி விஜித் விஜிதமுணி.டி. சொய்சா, பி. தயாரத்ன, திலங்க சுமதிபால, காமினி லொக்குகே, ஏர்ல் குணசேகர, சீ.ஏ. சூரியஆரச்சி, உதித் லொக்குபண்டார, வி.கே. இந்திக, ரீ.பீ. ஏக்கநாயக்க, பி. பியசேன. குணரத்ன வீரகோன், ஏ.எம். சாமிக்க புத்ததாஸ, சிறிபால கமலத், இந்திக பண்டாரநாயக்க, திஸ்ஸ கரல்லியத்தே, பிரபா கணேசன், சுசந்த புஞ்சிநிலமே, சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, ஜீவன் குமாரதுங்க, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, எஸ்.பீ.நாவின்ன, சரத் வீரசேகர, சஜின்.டி.வாஸ் குணவர்த்தன, ஜே.ஆர்.பி.சூரியபெரும, செஹான் சேமசிங்க, கெஹலிய ரம்புக்வெல, திளும் அமுணுகம, எரிக் பிரசன்ன வீரவர்த்தன, டபிள்யூ.பீ. ஏக்கநாயக்க, ரொசான் ரணசிங்க, நிமல் விஜேசிங்க, எஸ்.சீ.முத்துகுமாரன, நிஷாந்த முதுஹெட்டிகமகே. எல்லாவல மேதானந்த தேரர், பெருமாள் ராஜதுரை, சில்வெஸ்திரி அலன்றின், நிரூபமா ராஜபக்ஷ, வை.ஜீ. பத்மசிறி, நவீன் திஸாநாயக்க, சந்திரசிறி கஜதீர, பசீர் சேகுதாவுத். எச்.எம்.எம். ஹரீஸ்.
Post a Comment