கழிவகற்றல் முகாமைத்துவம் - ஹிஸ்புல்லா மலேசிய குழுவுடன் சந்திப்பு (படங்கள்)
(எப்.எம்.பர்ஹான்)
கிழக்கு மாகாணத்தில் நாளாந்தம் சேரும் கழிவுகளை சேகரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமொன்றை உருவாக்க மலேசிய குழு உறுதி மட்டு-தாழங்குடாவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்ட காணியை இக்குழு நேரில் சென்று பார்வை.
கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக கழிவுகளை சேகரித்து மின்சார உற்பத்திதி திட்டமொன்றை உருவாக்க மலேசிய மாநகர உயர் தொழிநுட்ப வியலாளர் தலைமையிலாள குழு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்'சிறுவர் அபிவிருத்திமகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உறுதியளித்தனர்.
கிழக்கு மாகாணத்தில் மிகவும் அவசியமாக முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டம் தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மலேசிய மாநகர தொழிநுட்ப வியலாளர்களுக்கு எடுத்துக் கூறி மக்களின் அவலங்களை விளக்கியதையடுத்தே இத் திட்டத்திற்கு மலேசிய குழு உறுதியளித்தனர்.
இது தொடர்பான விஸேட கலந்துறையாடல் இன்று செவ்வாய்க்கிழமை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதளை தொடர்ந்து பொறியியலாளர் பிராங் தலைமையிலான குழு கழிவுளை சேகரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயற்படவுள்ள மட்டக்களப்பு –தாழங்குடா பிரதேசத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்'மலேசிய தொழிநுட்பவியலாளரலர் குழுவின் தலைவர் பிராங்'கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எப்.எம்.சிப்லி பாரூக் உள்ளிட்ட உயர் குழுவினர் இவ்விஜயத்தில் பங்கேற்றனர்.
Post a Comment