வெலிக்கடையில் கொல்லப்பட்ட அஸார்தீனின் மரணம் உணர்த்துவதென்ன...?
(இந்தவாரம் வெளியாகிய நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)
பட உதவி - Vi
வெலிக்கட சிறைச்சாலையில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையினை அடுத்து இடம் பெற்ற கைகலப்பின் போது கொல்லப்பட்ட சிறைக்கைதிகளில் 1500 ரூபா அபராதத்தை செலுத்த முடியாததன் காரணமாக சிறைவாசமிருந்த 40 வயதுடைய அஸ்வர்தீனும் இடம் பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடப்பதற்கு ஓரிரு தினங்களுக்கு முன் சிறு குற்றம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்ட இவர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 1500 ரூபா அபராதம் இவருக்கு விதிக்கப்பட்டபோதும் அதனைச் செலுத்த முடியாததன் காரணமாக இவர் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
திங்கட்கிழமை ஆகும்போது இவருடைய அபராதத்தைச் செலுத்தி இவரை மீட்டெடுக்க இவரது குடும்பத்தினர் தயாராகிக் கொண்டிருந்த போதே இவர் கொல்லப்பட்ட தகவலுடன் பொலிசார் வந்துள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்தில் நாட்டில் பாரிய குற்றச்செயல் புரிந்த பிரபல கேடிகள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இவர் களுக்கு மத்தியிலே இந்த சிறு குற்றம் செய்தவரும் சிக்கியிருக்கிறார். இங்கே நாங்கள் சொல்ல முற்படுவது இது போன்று சிறு சிறு தொகைகளை அபராதமாக செலுத்த முடியாததன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நுõற்றுக்கணக்கான முஸ்லிம் சிறைக் கைதிகள் சிறைவாசம் அனுபவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை முஸ்லிம்களில் சனத்தொகை விகிதாசாரத்தை விட கூடுதலானவர்கள் சிறைவாசம் அனுபவிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின் றன. முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலே தாண்டவமாடும் வறுமை, அறியாமை போன்றன இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலே பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு நுõற்றுக்கணக்கான இயக்கங்கள் இயங்குகின்றன. ஆனால் சிறிய சிறிய குற்றங்களை செய்து சிறை செல்கின்றவர்களின் நலனைக் கவனிக்க ஒரு இயக்கம் கூட இதுவரை உருவாகவில்லை. சிறு சிறு குற்றங்களுக்காக சிறை சென்றவர்களுக்கு இந்த நிலை ஏற்பட ஒரு பக்கத்தில் சமூகமும் பொறுப்புக்கூற வேண்டும். சமூகத்தில் ஒரு சாரார் வறுமைக் கோட்டின் கீழ் மிகவும் கஷ்டமாக வாழும்போது இன்னுமொரு சாரார் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை நாம் காணாமல் இல்லை. முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் தனவந்தர்கள் பலர் பல சமூகப் பணிகளை செய்தாலும் இவ்வாறான பக்கத்துக்கு தம் கவனத்தை இதுவரை ஈர்க்கவில்லை என்றே கூற வேண்டும்.
சவூதியில் மரண தண்டனை கைதியாகவிருக்கும் றிஸானா நபீக்கையம் முன்னுதாரண மாகக் கொள்ளலாம்.
குறிப்பாக கொழும்பு மாநகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழும் பெரும்தொகையினர் சிறு சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்படுகின்றனர். சில நேரங்களில் இவர்களுக்கு தாங்கள் செய்வது குற்றமா என்றுகூட தெரியாமல் இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் பெரிய புள்ளிகள் தமது இலக்குகளை அடைவதற்காக இவர்களைப் பயன்படுத்தியிருக்கலாம். ஒரு சிறிய தொகையைப் பெற்றுக் கொண்டு பெரும் கொலை, கொள்ளைகளை செய்த பட்டியலிலும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள்.
தலைநகரின் பல பகுதிகளிலே இயங்கும் பாதாள இயக்கங்களிலும் தம் இலக்குகளை அடைவதற் காக முஸ்லிம்களை பயன்படுத்துவதை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். இப்படி நாம் சொல்லும்போது உண்மையாக பாதாள இயக்கங்களில் செயற்படுபவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறைப்பதல்ல.
ஆனால் இந்த இயக்கங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பவர்களின் பின்னணிக்கு காரணம் அவர்களுக்கு போதிய கல்வி வாய்ப்புக்கள் இல்லாமையாகும். குறிப்பாக கொழும்பில் இருக்கின்ற முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து கல்வியை இடை நிறுத்தி செல்பவர்கள் இவ்வாறான இயக்கங்களில் சேர்கின்றார்கள். சிலர் கவர்ந்திழுக்கப்படுகின்றார்கள். சில நேரங்களில் இவர்களில் சிலருக்கு தாம் என்ன செய்கின்றோம் என்பது கூட தெரியாமல் இருக்கலாம்.
முஸ்லிம் மக்கள் மத்தியில் பல தஃவா அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. சில அமைப்புக்கள் மற்ற அமைப்புக்களை மிஞ்சி விடுமளவுக்கு போட்டிபோட்டு செயற்படுகின்றன. அவ்வாறு செயற்பட்டபோதும் அவர்களது கவனம் இவர்கள் பக்கம் திரும்பவில்லை என்றே கூறவேண்டும். இவ்வாறான தவறான வழிகளில் செல்பவர்களை திருத்துவதற்கான வழிமுறைகள் பற்றியோ போதனைகள் பற்றியோ தஃவா அமைப்புக்கள் இன்னும் சிந்திக்கத் தொடங்கவில்லை.
வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட அஸ்வர்தீனின் மறைவு சமூகத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். நாட்டின் நாலா புறங்களிலும் சிறையில் இருக்கின்ற சிறிய குற்றங்களைப் புரிந்தவர்களது விபரங்களை திரட்டி அவர்களுக்குரிய அபராதத்தைச் செலுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவதன் பாரதுரத்தை உணர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள் இது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். தமது நிகழ்ச்சி நிரலை மாற்றி சிறு சிறு தவறுகளை செய்வோரை திருத்த வழி செய்ய வேண்டும். தொழிலின்மை, கல்வி வசதியின்மை போன்றவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது தான் அஸ்வர்தீன் போன்றவர்களுக்கு ஏற்படும் அநியாயமான மரணங்களைத் தவிர்க்கலாம்.
அசார்தீனின் மரணம் கவலைக்குரியது. ஆனாலும் எந்த ஆத்மாவும் அதற்கு விதிக்கப்பட்ட நேரம் வரை வாழும் என்பதை அமீன் அவர்கள் மறந்துவிடடாரா?
ReplyDeleteஅதெவேளை சிறுகுற்றங்களுக்காக சமூகம் தண்டம் கட்ட வேண்டுமா? அப்படியானால் குற்றங்கள் தவிர்க்கப்படாதே! அதே குற்றத்திற்கு இஸ்லாமிய தண்டனையை பெற்றுக்கொள்ள குற்றஞ்சாட்டப்பட்டவர் முன்வருவாரா?
உலகாயத அடிப்படையில் அமீன் அவர்கள் சொன்ன கருத்திற்கு நியாயம் இருக்கலாம். ஆனால் மார்க்க அடிபப்டையில்?
நிலமை இவ்வாறிருக்க தஃவா அமைப்புகளை நோக்கி எங்கனம் அவர் விரல் நீட்ட முடியும்?
Salaam! I am agree with this but I am not blame any body. We should consider about this so if any body interst to make welfare our Muslim society plz mail me coz we have group aready. s_lanka_mujahedin@yahoo.com
ReplyDeleteநமது சமூகம் அடிப்படையை விட்டதன் விளைவு... எல்லாவற்றிலும். சமூகத்தை திருத்துவது மார்க்க அறிஞர்களினதும், மார்க்கத்தை படித்தவர்களினதும். கடமை. சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது அரசியல் வாதிகளின் கடமை.
ReplyDelete