Header Ads



டுவிட்டர் மூலமாக மோதும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலும், ஹமாஸ் போராளிகளும்..!



(Tn)

இஸ்ரேலும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கமும் தீவிர யுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் புதிய போர் முனையாக ‘டுவிட்டர்’ தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் பெயரிலும் ஹமாஸ் இயக்கத்தின் பெயரிலும் டுவிட்டரில் நேரடியாக யுத்த வர்ணனைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது யுத்த கள வீடியோ காட்சிகளும் பதிவேற்றப்படுகின்றன. கடந்த புதன்கிழமையன்று ஆரம்பமான இந்த நேரடி யுத்த கள வர்ணனையும் காட்சிகளும் இப்போதும் தொடர்கிறது. ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தளபதி அகமத் ஜபரி கொல்லப்பட்ட செய்தியை ரிliசீinatலீனீ (அழிக்கப்பட்டது) என்ற போஸ்டருடன் வெளியிட்டது இஸ்ரேல் பாதுகாப்புப் படை. இதற்கு பதிலடியாக ஹமாஸ் தரப்பில், “எங்களது ஆசிர்வதிக்கப்பட்ட கரங்கள் உங்களது தலைவர்களையும் படைவீரர்களையும் நெருங்கும்” என்று எச்சரிக்கை விடப்பட்டது.

அதற்கு இஸ்ரேல் தரப்பில், ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களோ இளம் உறுப்பினர்களோ அனைவரது முகங்களும் இனிவரும் நாட்களில் தரையில் வீழ்ந்து கிடக்கும் என்று பதில் தரப்பட்டிருக்கிறது.

இது மட்டுமின்றி கடந்த 20 மணி நேரத்துக்கும் மேலாக காசா பகுதியின் மீதான இஸ்ரேலின் உக்கிர வான்வழித் தாக்குதலை நேரடியாக ஹமாஸ் இயக்கம் வெளியிட்டுக் கொண்டே இருந்தது மேலும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கிய தங்களது ரொக்கெட் தாக்குதலின் வீடியோ காட்சியையும் ஹமாஸ் வெளியிட்டது. இதற்கு பதிலடியாக ‘காசாவின்’ ரொக்கெட் குடோன் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் என்று இஸ்ரேல் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இப்படி இஸ்ரேலும் ஹமாஸ் இயக்கமும் நேரடியாக யுத்தம் நடத்திக் கொண்டிருக்க இப்பொழுது டுவிட்டருக்கு சிக்கல் வந்துவிட்டது. மோதலைத் தூண்டும் விதமான பதிவுகளை டுவிட்டர் எப்படி அனுமதிக்கலாம் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

No comments

Powered by Blogger.