மூத்த ஊடவியலாளர் பழுலுல்லாஹ் குறித்த சிறு குறிப்பு
தினக்குரல் பத்திரிகையில் நான் ஊடகவியலாளராக பணியாற்றியபோது காத்தான்குடி சார்பில் தினக்குரல் பத்திரிகைக்கு ஊடகவியலாளராக பணியாற்றியவரே மூத்த ஊடவியலாளர் பழுலுல்லாஹ்.
தொலைபேசி மூலம் பத்திரிகை காரியாலயத்திற்கு அடிக்கடி தொடர்பு கொள்ளும் அவர் எம்முடன் சுவாரசியமாக கலந்துரையாடுவார். செய்திகளை அவசரமாகவும், சுருக்கமாகவும் அனுப்புவதில் கூடிய கவனம் செலுத்திய அவரின் செய்திகள் ஊடகங்களில் தினமும் வெளியாகிபடி இருந்தது. இதற்கு அவர் பல்வேறு தரப்புகளுடன் கொண்டிருந்த நெருக்கமே காரணமாக அமைந்தது.
வயதில் மூத்தவராக காணப்பட்ட போதிலும் என்னைப்போன்ற இளவயதினருடன் சிரித்து, சிரித்து தொலைபேசியில் உரையாடும் அவரின் குரல் இன்றும் எனது காதுகளில் ஒலிக்கிறது. காத்தான்குடி பிரதேச அரசியல்வாதிகள் சிலர் அவருக்கு தொடுத்த நெருக்கடிகள் குறித்தும் அவர் பேசியுள்ளார்.
இடைக்கிடையே அலுவலக தொலைபேசிக்கு தொடர்புகொள்ளும் அவர் கொழும்பில் என்ன நடைபெற்றது? அதன் உண்மை தன்மை என்ன, மட்டக்களப்பு எம்.பி.மார் பாராளுமன்றத்தில் என்ன உரையாற்றினார்கள் என்பன பற்றியெல்லாம் விசாரிப்பார்.
எமது முஸ்லிம் சமூகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில மூத்த முஸ்லிம் ஊடகவியலாளர்களே காணப்படுகிற நிலையில் மூத்த ஊடவியலாளர் பழுலுல்லாஹ்வின் மரணம் நிகழ்ந்துள்ளது.
ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்.
(ஊடகவியலாளர்)
(ஊடகவியலாளர்)
Post a Comment