Header Ads



மிகவிரைவில் இணைப்பாளர் பதவி வழங்கப்படும் - முழக்கம் மஜீத் நம்பிக்கை


கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத்தின் இணைப்பாளர் பதவி தனக்கு வழங்கப்படும் என நம்புகிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதி தலைவர் ஏ.எம்.மஜீட் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடத்தின் தீர்மானத்திற்கு அமைய விரைவில் தனக்குரிய நியமத்தை மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் வழங்குவார் என்ற நம்பிக்கையுடனேயே நான் உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எம்.எச்.எம்.அஷ்ரப் சமூக நற்பணி மன்றம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் யாழ். முஸ்லிம் இணையத்தளம் தொடர்பு கொண்டு வினவிய போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதி தலைவர் ஏ.எம்.மஜீட் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதி தலைவர் ஏ.எம்.மஜீடிற்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் இணைப்பளர் பதவி வழங்கப்படும் என கட்சி தலைமைத்துவம் உறுதியளித்திருந்துதன.

எனினும் இந்த நியமனம் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், எம்.எச்.எம்.அஷ்ரப் சமூக நற்பணி மன்றம்  குறித்த பதவியை உடனடியாக வழங்குமாறு கட்சி தலைவரும் நீதி அமைச்சருமான ஹக்கீமிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.