Header Ads



கல்முனை மேயர் கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாடு (படங்கள்)


(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

கல்முனை மாநகர சபையை பொறுப்பேற்று ஒரு வருட காலம் நிறைவடைந்திருக்கின்றது. கட்சிக்குள் 30 வருட காலங்களுக்கும் மேலாக இருக்கின்றவர்களை விட மக்கள் எனக்கு வாக்களித்து அதிகூடிய வாக்குகளால் மாநகர சபைக்கு என்னை அனுப்பி வைத்திருக்கின்றார்கள். எனது அரசியல் பிரவேசம் 45 நாட்கள் மட்டும் கொண்டது என கல்முனை மாநகர சபை மேயர் டொக்டர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

இந்த வெற்றியில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பும் இருக்கின்றது. தேர்தல் காலங்களில் எனது எனது விடயங்களை உரிய முறையில் ஊடகங்களில் வெளியிட்டு உறுதுணை புரிந்திருக்கின்றீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று(18) கல்முனை மாநகர சபை மேயரின் கொழும்பு தெஹிவளை இல்லத்தில் நடைபெற்றது. இந்த  மாநாடு ஊடகவியலாளர்களாகிய உங்களுக்கு நன்றியை தெரிவிக்கவும் மாநகர சபையின் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் விளக்கவுமே ஒழுங்கு செய்யப்பட்டது  என்றார். 

கல்முனை மாநகர மேயராக வந்தபின் கொழும்பில் உங்களை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என் நினைத்திருந்தேன் அதற்கான உரிய சந்தர்ப்பம் கிடைக்காமல் போய் தற்போதுதான் அந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அன்று பத்திரிகையாளர் மாநாட்டை கொழும்பில் நடத்தக்கூடிய சூழல் எனக்கு இல்லாத காரணத்தினால் கல்முனையிலேயே இரண்டு பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்தினேன்.

எனது அரசியில் பிரவேசம் திடீரென்று வந்ததொன்று. குறைந்தது 45 நாட்கள் மட்டுமே. அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்ற மக்களுடைய அபிலாசை, எண்ணம் என்னை அரசியலுக்குள் இன்று நுழைய வைத்துள்ளது.

மேடை நாடகங்கள், பேச்சு போட்டிகள், அறிவுக் களஞ்சியங்கள் போன்றவற்றில் அப்போது நான் ஆர்வத்துடன் பங்குகொள்வதுண்டு  இதனை அவதானித்த ஆசிரியர்கள்கூட பிற்காலத்தில் நான் ஒரு அரசியல்வாதியாக வருவாய் என்று அன்று கூறியதை இன்று நான் எண்ணிப்பார்க்கின்றேன். உண்மையில் அது இன்று மெய்யாகிவிட்டது.

மர்ஹூம் அஷ்ரபின் மறைவிற்கு பின்னர். தற்போது இருக்கின்ற கட்சியின் தலைவர் பல சவால்கள், போராட்டங்களுக்கு மத்தியில் கட்சியை வழிநடாத்தி செல்கின்றார்.

கல்முனை மநாகர சபையில் நாங்;கள் ஒரு அரசாங்க கட்சியாக இல்லாவிட்டாலும் அரசாங்கத்தோடு இணைந்து கல்முனை மாநகர சபையை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்கின்றோம்.

மாநகர சபையை பொறுப்பேற்றபோது மிகவும் அவலமான நிலையையே காணமுடிந்தது. அங்கு கடமை புரிகின்ற உழியர்களுக்குக்கூட சம்பளம் வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை. 

தற்போது அதனை தலைநிமிர்ந்து நிற்கின்ற மாநகர சபையாக  ஒருவருட காலத்தில் அல்லாஹ்வின் உதவியால் மாற்றியமைத்திருக்கின்றோம். 

ஒரு கோடி 50 இலட்சம் ரூபாவை நிலையான வைப்பில் இட்டு பல வருமானங்களை திரட்டியும் வருமானங்கள் எங்கெல்லாம் இருக்கின்றது என அடையாளம் கண்டு இந்த மாநகர சபை மக்களுக்கான தேவைகளை இன்று நிறைவேற்றி வருகின்றது.

2012ம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்டத்தை சிறந்த முறையில் தயாரிப்பதற்கு எங்களுக்கு போதிய கால அவகாசம் அன்று இருக்கவில்லை. ஆனால் 2013ம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்டம்  மக்களுடைய கருத்துக்கள், பங்களிப்பு, அபிலாசைகள் கேட்டறிந்து தயாரித்துக் கொண்டிருக்கின்றோம்.

முன்னைய காலங்களில் மாநகர சபை இருந்த நிலை வேறு இன்று சகல மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற மாநகர சபையாக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது.

எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்தையும் செய்தும் சொல்லியும் வருகின்றோம். 

2009, 2010 மற்றும் 2011 ஆண்டுகளின் வரவு செலவு திட்டத்துடன் ஒப்பிடும்போது 2012ம் ஆண்டில் எதிர்பார்த்த வருமானத்தை எட்டியிப்பது தெளிவாக தெரிகின்றது.  

ஓவ்வொரு பிரிவுகளாக பிரித்து மாநகர சபையினுடைய வருமானங்களை இனங்கண்டு அவற்றை ஸ்திரப்படுத்தி வருகின்றோம். 

குறிப்பாக குப்பை கூலங்களை அகற்றுகின்ற விடயத்தில்கூட ஒரு மாதத்திற்கு 15, 20 இலட்சம் ரூபா செலவு செய்கின்றோம். 

கூடுதலான அபிவிருத்தி திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்ற வருமானத்தில் ஒவ்வொரு ஊருக்கும் நிதிகளை ஒதுக்கியும் தமிழ் சகோதரர்களுக்கென்று ஒரு விகிதாசாரத்தில் பரஸ்பர ஒற்றுமையின் அடிப்படையில் மாநகர சபையை நடாத்தி வருகின்றோம். 

இந்த மாநகர சபையில் ஆளணி மிகவும் பற்றாக்குறையாக காணப்பட்டது. ஆளுநரைச் சந்தித்து வியடத்தை தெளிவுபடுத்தியதன் பயனாக ஒரு சிலரை நியமிக்க அனுமதி கிடைத்தது.  

கல்முனை மாநகர சபையில் 76 கிராம சேவகர் பிரிவுளில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். எங்களுக்கென அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிக வருமானத்தில் இருந்துதான் சம்பளம் வழங்கி அதன் மூலம் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருகின்றோம். 

எதிர்க்கட்சிகளுடன் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் ஒற்றுமையாக எல்லா உறுப்பினர்களையும் அரவணைத்து மாநகர சபையை வழிநடத்தி செல்கின்றோம். மக்களும் இதனை நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றார்கள். 

2004ம் ஆண்டிலிருந்து அறிமுகம் செய்யப்பட்ட சோலை வரியை மக்கள் மத்தியில் எடுத்து விளக்கி புதிய தொழிநுட்ப உத்திகளை பயன்படுத்தி வருவதால் இன்று இலாபம் ஈட்டும் மாநகர சபையாக இருக்கின்றது. 

அன்று இருந்த நிர்வாகம் சரியான முறையில் இயங்காததால் சோலை வரி மக்களுக்கு பெரும் சுமையாக ஆகி ஒவ்வொருவரும் 25, 30 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவற்றை தீர்;ப்பதற்காக புதிய நிர்வாகம் வித்தியாசமான தீர்வுகளை கொடுத்ததன் காரணமாக மக்கள் சோலை வரியை ஆர்வத்துடன் செலுத்த முன்வருகின்றனர். 

அரசாங்கத்தினால் எந்தவிதமான ஊக்குவிப்புக்களோ உதவிகளோ எமக்கு கிடைப்பதில்லை. செலவுகளை முடிந்தவரை கட்டுப்படுத்தியுள்ளோம்.  

மக்களுக்கு இன்று அதிகளவான தேவைப்பாடுகள் இருக்கின்றது. எங்களது அடுத்த கட்டம் இனி அபிவிருத்தி செயற்பாடுகளே. அபிவிருத்தி என்று வருகின்றபோது பல இடையூறுகளும், தடங்கல்களும் வருவதை காண்கின்றோம். 

அஷ்ரபின் கனவுகள் பல இருக்கின்றன. அவற்றை நனவாக்க கட்சியின் தலைவருடன் பேசி ஒரு சிலவற்றையாவது எங்களுடைய காலத்தில் செய்யலாம் என எண்ணியுள்ளோம்.

இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் முக்கியஸ்தர்களுடனான முக்கியந்திப்புக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. துடிதுடிப்பான உறுப்பினர்கள் மாநகர சபையில் இருப்பதால் எல்லோரும் இந்த மாநகர சபைக்கு சேவை செய்ய காத்திருக்கின்றார்கள். 

பாரிய சவால்களுக்கு மத்தியில் மாநகர சபையை பொறுப்பேற்று ஒரு வித்தியாசமான வடிவத்தை  நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம். கடந்த காலத்தில் உயிருக்குகூட அச்சுறுத்தல் ஏற்பட்டது. உள்ள10ரில் இருக்கின்ற பல அரசியல்வாதிகள்கூட என்னுடைய வேகத்தை  பார்த்து அச்சுறுத்தியிருக்கின்றார்கள்.

உடகவியலாளர்களாகிய உங்களுடைய உதவி எதிர்காலத்தில் எனக்கு தேவையாக உள்ளது. உங்களது பேணா மிகவும் வலிமையும் சக்தியும் வாய்ந்தது. உண்மையை உண்மையாக எழுதி சுட்டிக்காட்ட வேண்டும் தவறை நான் செய்தாலும் தட்டிக்கேட்காமல் இருக்கக்கூடாது.

கிட்டத்தட்ட 45 ஆயிரம் வீட்டு உரிமையாளர்கள் கல்முனை மாநகர சபையில் இருக்கின்றார்கள். கழிவு நீர், தேங்கி நிற்கும் நீர்களால் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது.

கழிவு நீரையும், தேங்கி நிற்கும் வடிகால்களையும் சுத்தப்படுத்தி கழிவு நீரை கடலுக்குள் விடுவதற்கு ஜெய்க்கா நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துள்ளதாக தெரிவித்;த அவர் ரூபா ஐந்து கோடியிலிருந்து ரூபா ஆறரை கோடியை சொந்த வருமானத்தை மாநகர சபை ஈட்டியுள்ளதாக தெரிவித்தார். 2013ம் ஆண்டில் 16 கோடி ரூபா வருமானத்தை ஈட்டுதவற்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் டொக்டர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். 






No comments

Powered by Blogger.