Header Ads



சூடானை அச்சுறுத்தும் மஞ்சள் காய்ச்சல்

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ளது சூடான் நாடு. இங்கு சமீபகாலமாக மஞ்சள் காய்ச்சல் எனப்படும் கொடிய நோய் பரவி வருகிறது. நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் தினந்தோறும் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு கடந்த 1 1/2 மாதத்தில் மட்டும் மஞ்சள் காய்ச்சல் நோய் தாக்கியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சூடானில் உள்ள டார்பர் பகுதியில்தான் மஞ்சள் காய்ச்சலால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொசுக்களால் இந்த காய்ச்சல் பரவுகிறது. இந்நோயை கட்டுப்படுத்த உரிய மருந்துகள் சூடானில் இல்லை. என்றாலும் தடுப்பு நடவடிக்கையில் சூடான் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மஞ்சள் காய்ச்சலை கட்டுப்படுத்த தவறினால் ஆப்பிரிக்காவில் உள்ள 32 நாடுகளில் வாழும் 50 கோடி மக்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 

கடந்த 2005-ம் ஆண்டு சூடானில் உள்ள தெற்கு கொர்டோபன் பகுதியில் மஞ்சள் காய்ச்சல் தாக்கி 160 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.