Header Ads



நாட்டைவிட்டு ஓடமாட்டேன் - சிரியாவில்தான் மரணிப்பேன் - பஷர் அல் ஆசாத்

"நாட்டை விட்டு வெளியேற முடியாது; செத்தால் சிரியாவில் தான் சாவேன்,'' என, அந்நாட்டு அதிபர் பஷர் அல் ஆசாத் தெரிவித்துள்ளார். 

சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, 20 மாதங்களாக கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை, ராணுவம் ஒடுக்கி வருகிறது. "நாட்டில் அமைதி ஏற்பட, ஆசாத் பதவி விலக வேண்டும்' என, அமெரிக்கா வற்புறுத்தியது. இதற்கு ஆசாத், மறுத்ததால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா ஆயுதங்கள் சப்ளை செய்கிறது.இதனால், சிரியாவில் தொடர்ந்து சண்டை நடக்கிறது. இதுவரை 37 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.ஐ.நா., சார்பிலும், அரபு நாடுகள் சார்பிலும் அமைதி தூதர்கள் மூலம் பேச்சு வார்த்தை நடத்தியும், முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

இதற்கிடையே, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், "ஆசாத் பதவி விலகினால், அந்நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற உதவுவோம்' என, கூறியிருந்தார்.

இது குறித்து ஆசாத், ரஷ்ய "டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

நான் பொம்மையல்ல, மேற்கத்திய நாடுகளால் நான் உருவாக்கப் படவில்லை, சிரியாவால் உருவாக்கப்பட்டவன். எனவே, சிரியாவில் தான் வாழ்வேன். இந்த நாட்டில் தான் சாவேன்.சிரியாவில் சண்டையை தூண்டும் முயற்சியில் வெளிநாடுகள் ஈடுபட்டால், மோசமான பின்விளைவுகள் ஏற்படும். இதனால், அட்லாண்டிக் கடல் முதல், பசிபிக் கடல் வரையிலான பகுதியில் ஸ்திர தன்மை குலையும்.இவ்வாறு பஷர் அல் ஆசாத் கூறினார்.

No comments

Powered by Blogger.