தமிழ் ஊடகங்கள் + தமிழ் எழுத்தாளர்களின் கவனத்திற்கு..!
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த பெண் ஒருவர் தற்போது பாலியல் தொழில் செய்வது குறித்த நேர்காணலொன்றை அண்மையில் ஆனந்த விகடன் சஞ்சிகை வெளியிட்டிருந்தது. அதனையடுத்து குறித்த நேர்காணல் பல்வேறு தமிழ் ஊடகங்களில் பிரதான இடம்பெற்றிருந்தது.
இவ்வாறான நிலையில் தமிழ் அன்பர் ஒருவரின் இணையத்தில் (யோ.கர்ணன்) வெளியாகியிருந்த இதுதொடர்பிலான பதில் கட்டுரையொன்று எமது கவனத்தை ஈர்த்தது.
அந்த நீண்ட கட்டுரையிலிருந்த ஒரு பந்தி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்திருந்தது.
இதோ அந்த பந்தி..!
''வடபுலத்திலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்ட பின்னர், அந்தச் சமூகமும் இப்படியான அவலத்தை எதிர் கொண்டார்கள்''
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு அடிப்படை காரணம் அவர்கள் கலிமா சொன்னதே ஆகும். அதாவது வணக்கத்திற்குரிய நாயகன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் இறுதித்தூதர் என சான்று பகர்ந்தேன் என்ற உறுதிப்பாடுடையவர்களே முஸ்லிம்களாவர். இவ்வாறானவர்களை மாத்திரமே புலிகள் வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு பலாத்கார இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தினர்.
ஹிட்லர் கூட யூதர்களுக்கு இரண்டு மணித்தியால அவகாசம் வழங்கி அவர்களை ஜேர்மனியிலிருந்து விரட்டியடிக்கவில்லை. ஆனால் அதை வே.பிரபாகரன் தலைமையிலான புலிகள் செய்தனர். தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் வாழந்த ஒரு இலட்சத்திற்கு அதிகமான முஸ்லிம்கள் இரு மணித்தியால அவகாசத்தில், கையில் ஒரு சொப்பிங் பேக் மற்றும் 200 ரூபாய்களை மாத்திரம் கொண்டு செல்லவே அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு துயரங்களை சுமந்தவர்களாக வெளியேறிய முஸ்லிம்கள் அகதி முகாம்கள், உறவினர் வீடுகள், நலன்புரி நிலையங்களில் அல்லற்பட்ட போதிலும் ஒருபோதும், எந்த சந்தர்ப்பத்திலும் அருவருக்கத்தக்க தொழில்களில் இதுவரை ஈடுபட்டதில்லை. அதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை.
தமிழ் ஊடகங்களும், குறிப்பிட்டதொரு தமிழ் எழுத்தாளர்களும் வடக்கு முஸ்லிம்கள் குறித்து தொடர்ந்தும் தவறான தகவல்களையே பதிவிட்டு வருகிறார்கள். அதுகுறித்து முஸ்லிம்கள் தரப்பில் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்படும் வேளைகளில் தமிழ் ஊடகங்கள் தமது கண்களை மூடிக்கொள்கின்றன.
இந்நிலையில் ''இராமர்கள் தேடும் சீதைகள்'' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையில் தற்போது பாலியல் தொழில் செய்யும் முன்னாள் புலி உறுப்பினர் போன்று வடக்கு முஸ்லிம்களும் இப்படியான அவலத்தை எதிர் கொண்டார்கள் என்று குறித்த கட்டுரை கூறுவதை ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம் சமூகமும் கண்டிக்கிறது.
குறிப்பாக வடக்கு முஸ்லிம்கள் சார்பில் இந்த கூற்றுக்களை முற்றாக நிராகரிக்கிறோம். குறித்த கருத்துக்களை தாங்கிவந்த ஊடகங்களும், குறித்த கட்டுரையாளரும் வடக்கு முஸ்லிம்களிடத்தில் இதுதொடர்பில் உரிய வருத்தங்களை பதிவுசெய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுப்பதுடன், குறித்த கட்டுரையில் முஸ்லிம்கள் தொடர்பில் எழுதப்பட்டுள்ள பந்தி உடனடியாக நீக்கப்பட வேண்டுமெனவும் வடக்கு முஸ்லிம்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்..!
புலிகள் வேசித் தொழில் செய்கிறார்கள் என்றால் அதற்கு அவர்கள் தானே காரணம்.முஸ்லிம்களை கருவறுத்து
ReplyDeleteவாழ நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது தான் கதி.புலன் பெயர்ந்த, ஈழக் கனவில் மிதக்கும் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து,பங்குப் பிரச்சனையில் கொலை வெறி பிடித்து தெரியும்
புலிகள் செய்த அநியாயத்திற்கு அப்பாவி சனங்களை கேவலமாக எழுதி இந்தியாக்காரன் சம்பாதிக்கிறான்.