பிரித்தானியாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயந்தோர் அமைப்பின் புகைப்படக் கண்காட்சி (படம்)
(எப்.எம்.பர்ஹான்)
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் ஏற்பாட்டில் 2012 புகைப்படக் கண்காட்சி அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்றது.
இப் புகைப்படக் கண்காட்சியை பிரித்தானியாவுக்கான இலங்கையின் புதிய பிரதி உயர்ஸ்தானிகர் நெவில் டி சில்வா ஆரம்பித்து வைத்தார்.
இப் புகைப்படக் கண்காட்சியில் இலங்கையில் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி, ஸ்ரீலங்காவில் காணப்பட்ட முன்னைய நகரங்கள், ஸ்ரீலங்காவில் காணப்படும் இயற்கை காட்சிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் சேவைகள் பற்றிய புகைப்படங்கள், முஸ்லிம்களின் புனித பிரதேசங்கள், இலங்கையின் வரலாற்றுச் சின்னங்கள், இலங்கையில் முஸ்லிம் மத் தலைவர்களின் புகைப்படங்கள், முஸ்லிம்களின் பிரச்சினைகள், அவளங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயந்தோர் அமைப்பு சந்தித்த அரசியல் தலைவர்கள், முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னங்கள் அடங்கிய புகைப்படங்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் இக்கண்காட்சியை பார்வையிட்டவர்களுக்கு புகைப்படங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன் போது பிரதி அதிதிக்கு புகைப்படங்கள் தொடர்பான விபரங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பின் தலைவர் எம்.எல்;. நஸீர் மற்றும் அமைப்பின் செயலாளர் எஸ். இஸ்ஸடீன் மற்றும் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் அமீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரினால் தெளிவுபடுத்தப்பட்டது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பானது பிரத்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கும் பல்வேறு விதமான உதவிகளையும், சேவைகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment