Header Ads



எகிப்தில் குழப்பத்தை ஏற்படுத்த இஸ்ரேல் சதி - ஷியா குழுக்களை பயன்படுத்த திட்டம்


(TU)

ஆக்கிரமிப்பு அரசான இஸ்ரேல் ஈரானில் உள்ள ஷியா தீவிரவாத குழுக்களை பயன்படுத்தி எகிப்தில் உள்நாட்டு போரை துவக்க சதித்திட்டம் தீட்டுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஃபலஸ்தீன் விவகாரத்தில் நிபுணரான டாக்டர் ஸமீர் கத்வாஸ் இந்த ஆய்விற்கு தலைமை வகித்தார். எகிப்தில் ஈரான் ஆயுதக்குழுக்களை வலுப்படுத்த சியோனிஸ்டுகள் திட்டமிட்டுள்ளனர். ஈரானில் உள்ள தீவிரவாத குழுக்களை எகிப்திற்கு அனுப்பி அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குவதே சியோனிஸ்டுகளின் திட்டமாகும்.

இந்த ஆயுதக்குழுக்கள் பரஸ்பரம் மோதலில் ஈடுபடும் பொழுது எகிப்தில் உள்நாட்டுக் கலவரம் வெடிக்கும். அதன் மூலம் எகிப்தில் ஜனநாயக புரட்சியின் மூலம் உருவான இஸ்லாமியவாதிகளின் அரசு செல்வாக்கை இழக்கும். தொடர்ந்து இந்த ஆயுதக்குழுக்களை பயன்படுத்தி இஸ்ரேல் எல்லையில் பிரச்சனைகளை உருவாக்கி, அதன் மூலம் யூத ராணுவம் எகிப்தில் தலையிட்டு கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர வேண்டும் என்பதுதான் சியோனிஸ்டுகளின் திட்டமாகும்.

சியோனிச உளவு அமைப்பினரை கைது செய்தது, ஃபலஸ்தீன் தடை உள்ளிட்ட விவகாரங்களில் யூத விருப்பங்களை புறக்கணிப்பது ஆகியன இஸ்ரேலுக்கு எகிப்து மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் ஈரானின் ஷியா கொள்கையையும், சிரியா விவகாரத்தில் அந்நாட்டின் நிலைப்பாட்டையும் எகிப்து எதிர்ப்பது ஈரானுக்கு எகிப்து மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

No comments

Powered by Blogger.