அழிவின் விளிம்பில் அல்லிராணிக் கோட்டை (படங்கள் இணைப்பு)
(முசலியூர். கே.சி.எம்.அஸ்ஹர்)
இக்கோட்டை, மன்னார் முசலி பிரதேச சபைக்குட்பட்ட அரிப்புக் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு தெற்கே கடற்கரையில் அமைந்துள்ளது. இது சிலாவத்துறை கடற்கரைப் பிரதேசத்தில் நடைபெற்று வந்த முத்துக் குளித்தலை மேற்பார்வை செய்வதற்காக 3மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. இதற்குரிய அடிக்கல்லை இலங்கையின் முதலாவது ஆளுனர் பிரட்டரிக்நோர்த் நாட்டிவைத்தார்.
இன்று கடலின் அலைகள் இதன் தென்சுவர்களை இடித்து அழித்துள்ளன. இன்னும், சில காலங்களில் இக்கோட்டை முற்றாக கடலால் காவுகொள்ளப்படலாம் என, இப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். வரலாற்று நினைவுச் சின்னமான இதனைப் பாதுகாப்பதற்கு அரச அதிகாரிகளோ,தொல் பொருளியலாளர்களோ, யுனெஸ்கோ நிறுவனமோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததையிட்டு இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Post a Comment