காத்தான்குடியில் 'கிழக்கு' செய்திப் பத்திரிகையின் விற்பனைப் பிரதிநிதிக்கு அச்சுறுத்தல்
(R.F.Arooz. Chief Editor - KIZHAKKU weekly)
கொழும்பிலிருந்து பிரதி திங்கட்கிழமை தோறும் வெளிவருகின்ற 'கிழக்கு' வார இதழை விற்பனை செய்துகொண்டிருந்த விற்பனைப் பிரதிநிதியை அச்சுறுத்தி அவர் கையில் வைத்திருந்த 'கிழக்கு' செய்திப் பத்திரிகையின் 48 பிரதிகளை பலவந்தமாகப் பறித்தெடுத்துச் சென்ற சம்பவமொன்று (26.11.2012) 5.30 மணியளவில் காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
'கிழக்கு' செய்திப்பத்திரிகையின் விற்பனைப் பிரதிநிதியொருவர் காத்தான்குடி டெலிகொம் ஜங்ஸனில் பத்திரிகை விற்பனை செய்துகொண்டிருந்த சமயம் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் பிராந்தியக் காரியாலயத்திற்கு முன்னால் நின்று கொண்டிருந்த மூன்று நபர்கள் விற்பனைப் பிரதிநிதியிடம், 'காத்தான்குடியைப் பற்றி உனக்குத் தெரியுமா? இங்கு இந்தப் பத்திரிகை விற்கக் கூடாது' என அதட்டி அவரது கையிலிருந்த பத்திரிகைகள் அனைத்தையும் பலவந்தமாகப் பறித்ததுடன் விற்பனைப் பிரதிநிதியின் நிறுவன அடையாள அட்டையையும் பறித்து அதன் போட்டோக் கொப்பி பிரதியை எடுத்துக்கொண்டதாக குறித்த விற்பனைப் பிரதிநிதியான ஏ.எஸ்.எம்.நிஜாம் என்பவர் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
Post a Comment