இஸ்லாமிய பிரச்சார அமைப்புகளுக்கு முஸ்லிம் சமூகத்தின் விண்ணப்பம்..!
(இக்பால் அலி)
ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தெலும்புக்கொல்ல பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிமை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளிவாசல் சுமார் 12.45 மணி அளவில் சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த 10 பேரை கடும் தாக்குதல் நடத்தி விட்டு பள்ளிவாசலையும் சேதப்படுத்தி உள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்குள்ளானர்வர்கள் இன்னும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்தக் காலச் சூழலில் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமான சூழலில் ஒரு துரதிஷ்டமான சம்வம் நிகழ்ந்துள்ளதாக பெரும்பாலான முஸ்லிமகள் கடுமையான விமர்சனம் தெரிவிக்கின்றனர்.
தெலும்புக்கொல்ல கிராமத்தில் சுமார் 250 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. இந்தக் குடும்பங்கள் யாவும் பெரிய பள்ளிவாசலுக்குக் கீழ் உட்பட்டவர்களாக இருந்தனர். அங்கு தொடர்ச்சியாக நிலவிய இஸ்லாமிய மார்க்க கருத்து முரண்பாட்டின் காரணமாக ஒரு அணியினர் 20-04 – 2012 புதிய பள்ளிவாசல் ஒன்றை உருவாக்கிக் கொண்டு பிரிந்து வந்தனர்.
இதன்போது இந்தப் பள்ளிக்கு அங்கத்தவர்களாக 90 பேர் அளவில் சேர்ந்து கொண்டனர். இந்தப் பள்ளிக்கு மஸ்ஜிதுல் ஹுதா எனப் பெயரிட்டு நிர்வாகக் குழு ஒன்றையும் அமைத்துக் கொண்டு செயற்பட்டு வந்தனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த வழக்கின் பிரகாரம் 23-8-2012 அன்று புதிய பள்ளியில் தங்களுடைய சமய கடமைகளைச் செய்து கொள்ள முடியும் என நீதி மன்றத் தீர்ப்பு புதிய பள்ளிவாசல்காரர்களுக்கு வழங்கப்பட்டன.
அதன்படி அவர்கள் தொழுகை நடத்தி வந்தார்கள். இருப்பினும் இவர்கள் அங்கு ஜும்ஆத் தொழுகை அங்கு நடத்தவில்லை. பள்ளி ஆரம்பித்து எட்டு மாதத்திலுள்ள 32 வார ஜும்ஆத் தொழுகைகளை தூர இடங்களிலுள்ள பள்ளிவாசலுக்குச் சென்றே தொழுது வந்தனர்.
ஒவ்வொரு நாளும் இவ்வாறு தூர இடங்களுக்குச் செல்ல முடியாது எனத் தீர்மானித்து அன்றைய தினம் ஜும்ஆத் தொழுகை நடத்த திட்டமிட்டிருந்தனர். அதேவேளை அன்றைய தினம் பள்ளி நிர்வாக முக்கிய உறுப்பினர்களை கொக்கெரெல்ல பொலிஸ் நிலையம் வரும்படி கோரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணித்திருந்தார்.
அதன்படி புதிய பள்ளி நிர்வாகிகள் அங்கு சென்றிருந்தனர். பொலிஸாருக்கும் இவர்களுக்குமிடையே ஜும்ஆத் தொழுகை நடத்துவது சம்மந்தமான கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. எனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் உரிய நேரம் வர புதிய பள்ளியில் திட்டமிட்டபடி ஜும்ஆத் தொழுகை நடைபெற்றுள்ளது.
இங்கு பெரும்பாலனவாகள் தொழுது விட்டு வீடு சென்று விட்டார்கள். ஜும்ஆத் தொழுகையும் நேரகாலத்துடன் முடிவடைந்துள்ளது. சிறு தொகையினர்தான் பள்ளியில் இருந்துள்ளனர்.
அப்போது சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் கோடாரி, அலவாங்கு, கம்பு, தடி, சவல் போன்ற பெரிய ஆயுதங்களுடன் வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 10 பேர் அளவில் கடுமையான காயத்திற்கு உள்ளானவர்கள் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் , ரிதிகம, பொல்கொல்ல ஆகிய மாவட்ட வைத்தியாசலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்பின் புதிய பள்ளிவாலுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஒருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்தப் பள்ளியில் தொழுகை நடத்தப்படுகிறது. பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்வம் குறித்து அருகிலுள்ள முஸ்லிம்ப பிரதேச மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
ஏனென்றால் இங்கு தாக்குதலுள்ளானவர்களும் தாக்கியவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக அடுத்த சமூகத்தவர்கள் கேவலமாக மதிக்கின்ற நிலைக்கு இந்தச் சம்வம் இந்தத் தருணத்தல் நடந்திருக்கக் கூடாது என்று கவலை தெரிவிக்கின்றனர். எதையும் பேசி புரிந்துணர்வு விட்டுக் கொடுப்புடன் நடந்திருக்க வேண்டும் என்ற கருத்தினை அவர்கள் சுட்டிக் காட்டுவதுடன் வீணாக கோடிக்கணக்கான பணத்தை நீதி மன்றத்திற்கும் பொலிஸாருக்கும் பாரிய பணத்தை அள்ளி இரைப்பதனை தவிர்த்துக் கொண்டு ஒரு சமாதான நிலைக்கு வரும்படி கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்
மத்தியகிழக்கில் நடக்கிறமாதிரி ஆயுத போராட்டம், கொலை என்று போறதுக்கு முன்னாடி நம்ம சமூகம் ஒரு நல்ல புரிந்துணர்வுக்கு வரணும்.
ReplyDeleteபெரும்பான்மை சமூகம் அல்லது சகோதர மொழி காடயர் கூட்டம் நம் பள்ளீயை தாக்கினால் கோஷங்களும், அறிக்கைகளும் அமைதி(?) ஆர்பாட்டங்களும் நடத்துகின்ற நம் முஸ்லிம் ஜமாத்கள், இலங்கை முஸ்லிம்களின் ஏக தலமைத்துவம் நாங்கள்தான் என்று முழங்கும் அ.இ.ஜ.உ போன்ற வைகள் இது வரைக்கும் ஒரு கண்டனத்தையோ, கவலையையோ தெரிவிக்காதது ஏனோ? அ.இ.ஜ.உ மாவின் வேண்டுகோளையும் அறிக்கையையும் சமாதானத்தையும் நேர்மையையும் விரும்பும் முஸ்லிம் உம்மத் மிக ஆவளோடு எதிர்பாக்கின்றோம்.
ReplyDelete