வெளிநாட்டவர்களுக்கு காணிகள் விற்க முற்றாக தடை - மஹிந்த பாராளுமன்றத்தில் முழக்கம்
(எம்.ஜே.எம்.தாஜுத்தீன்)
இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு காணி விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குத்தகை அடிப்படையில் வழங்கினால் 100க்கு நூறு வீத விலை அறவிடப்படும் என ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார துறைக்கு 125 பில்லியன்
நாட்டில் முறையான சுகாதார சேவையை வழங்கவென 2013 நிதியாட்டில் 125 பில்லியன் ரூபா நிதி ஒதுக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
கல்வித்துறைக்கான செலவு நூற்றுக்கு 15 வீதம் அறிவிப்பு
இலவசக் கல்வித்துறை அபிவிருத்திக்கென 2013ம் வரவு செலவுத் திட்டத்தில் கடந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதாக ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். அதன்படி கல்வித்துறைக்கு 306 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மொத்த தேசிய உற்பத்தியில் அது 4.1 வீத ஒதுக்கீடாகும்.
ஊடகவியலாளர், கலைஞர்களுக்கு 200 மில்லியன்
ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வாகனம் கொள்வனவு செய்ய வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது. இம்முறை அத்திட்டத்திற்கு மேலும் 200 மில்லியன் ஒதுக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
Post a Comment