இனங்களுக்கிடையே நல்லுறவைச் சீர்குலைக்க சமூக ஊடகங்கள் முற்படுகின்றனவா..?
சமயங்களுக்கெதிராகச் செயற்படும் பேஸ்புக் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் பேஸ் புக்கினூடாக சமயங்களுக்கெதிராக வெளியிடப்பட்டுள்ள நுõற்றுக்கணக்கான குறிப்புகளை மையமாக வைத்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களினூடாக இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக 19க்கும் மேற்பட்ட வெப்தளங்கள் இயங்கி வருவது பற்றி முஸ்லிம் தரப்பில் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகின்றது.
முஸ்லிம்கள் சம்பந்தமாகவும், இஸ்லாம் சம்பந்தமாகவும் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்ட வண்ணம் கடந்த பல வருடங்களாக இந்த வெப் தளங்கள் இயங்கி வருகின்றன.
இந்த வெப்தளங்கள் எங்கிருந்து இயங்குகின்றன. யார் இயக்குகின்றார்கள் என்பது இன்னும் வெளிச்சத்துக்கு வராதுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு உட்பட நாட்டின் ஆட்சியாளர்களது கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டும் கூட இதுவரை அவற்றைக் கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
மூன்று தசாப்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் சமாதானம் நிலவும் இந்தக் கட்டத்தில் இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அதில் குளிர்காய முற்படும் சில சக்திகளே இதன் பின்னணியில் இயங்குகின்றன என்ற சந்தேகம் பரவலாக எழுப்பப்பட்டுள்ளது.
தம்மை தேசிய பற்றாளர்கள் எனக் காட்டி இளைய தலைமுறையினருக்கு சிறுபான்மை இனங்களை நச்சாகக் காட்டி தமது பிரச்சாரத்தை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ந்து இவ்வாறு செய்யும் போது இளைய தலைமுறையினரது மனதில் சிறுபான்மைச் சமூகங்கள் பற்றி வெறுப்பே உருவாகும்.
சமூக ஊடகங்களினுடாக செயற்பட்ட அமைப்புக்கள் இப்போது பகிரங்கமாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தயாராகின்றன. இது இவ்வாறு செயற்பட முற்படும் போது நாட்டில் மோதல்களும் சண்டைகளும் ஏற்படும்.
இந்தச் சக்திகளின் பின்னணியிலிருப்பவர்கள் யார் என்பதனை தேடிக் கண்டறிவது முக்கியமாகும். இந்த நாட்டை கூறு போட்டுப் பிரிப்பதற்கு ஆசைப்பட்ட சில வெளிநாட்டுச் சக்திகள் இப்போது தமது இலக்கை அடைந்து கொள்ள இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்ற சந்தேகம் பரவலாக எழுப்பப்படுகின்றது. இது பற்றித் தேடிப் பார்ப்பது அரசின் பொறுப்பாகும்.
இந்த விடயங்களில் மௌனம் காத்தால் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஏற்படப் போகும் விளைவுகள் பாரதுõரமானதாக இருக்கும்.
இனங்களுக்கிடையிலான உறவைச் சீர்குலைத்து நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கும் சக்திகள் குறித்து அரசும் விழிப்பாக இருப்பது அவசியமாகும்.
சமூக ஊடகங்களது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். வெளிநாடுகள் பல இவ்வாறு செயற்படும் சமூக ஊடகங்கள் தொடர்பாக சில கட்டுப்பாட்டு முறைகளைக் கொண்டு வந்துள்ளன அவற்றையும் தேடிக் கண்டறிந்து சமூக ஊடகங்கள் வரம்பை மீறிச் செயற்படுவதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்.
Post a Comment