இனவாதத்தை எதிகொள்ள முஸ்லிம்கள் அற்றவேண்டிய பணிகள்..!
(சலாஹ்தீன்)
முஸ்லிம்கள் தங்கள் நாட்டுக்கும், ஜாதிக்கும், மதத்துக்கும் எதிராக திட்டமிட்டு செயற்படுகிறார்கள் என்ற தப்பெண்ணத்தில் பெரும்பான்மை இனவாதிகள் எமக்கு எதிராக பலமடங்கு திட்டமிடல்களையும், ஆயத்தங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் போகின்ற வேகத்தில் போனால் மிக விரைவில் எமக்கு எதிராக மிகப் பெரிய கலவரம் ஒன்றை உருவாக்குவார்கள். அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.
அவர்களின் பிரச்சாரம் நீண்டகாலத் திட்டமிடலுடன் கூடியதாகும். குறிப்பாக சிங்கள இளைஞர்களின் மனங்களில் முஸ்லிம் வெறுப்புணர்வை ஆழமாகப் பதித்து எதிரகாலத்தில் இலங்கையின் தனியார், அரச நிறுவனங்களை வழிநடத்தவுள்ள , இந்த நாட்டையே ஆட்சி செய்யப்போகும் மனங்ககளில் முஸ்லிம்கள் பற்றிய மிகப் பெரிய வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிரார்கள்.
ஆனால் எமது நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. எமது திட்டமிடல்கள், ஆயத்தங்கள் தான் என்ன? அவர்களின் பிரச்சாரத்துக்கு எதிராக நாம் செய்ய வேண்டிய ஒரே விடயம் active Communication ஆகும்.
எமது உண்மையான நிலைப்பாட்டை அவர்களுக்கு நேரடியா சொல்ல நாதியற்று, பிரச்சினை வரும் போது மட்டும் ஒட்டுப்போட்டுக் கொண்டிருக்கிறோம். ஏன்?
முஸ்லிம்கள் தான் இந்த நாட்டுக்கு மிகவும் விசுவாசமுள்ள ஒரே சமூகமாகும். இலங்கை எமது நாடு. அதைக் ஆக்கிரமிக்கவோ, சூரையாடவோ எமக்கு எந்தத் தேவையும் இல்லை. இவ்வாறு அவர்கள் முன்வைக்கும் ஏனைய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கங்களை தயார்படுத்தி, அவற்றை இனவாதம் கக்கும் "பொது பல சேனா" போன்ற துவேஷ அமைப்புகளுக்கும், ஏனைய சிங்கள சக்திககளான அனைத்து அரசியல் கட்சிகள், மகாநாயக்கர்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும். அத்துடன், எமக்கு எதிரான சிந்தனைகளை பொதுமக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சென்றுள்ளதால் சிங்கள ஊடகங்களை உச்ச அளவில் பயன்படுத்தி அவர்களின் சிந்தனைகளையும் மாற்ற வேண்டும்.
நாம் அறிந்த வகையில், பல கூட்டங்களில் எமது தலைமைகள் இது தொடர்பான பல திட்டங்களை பேசுகின்றனர். ஆனால் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் எமது முயற்சிகள் அனைத்தும் சிதறிய நிலையில் நடைபெறுவதாகும். ஒவ்வொரு இயக்கமும், அமைப்பும், நிறுவனமும் தாங்களே செய்ய வேண்டும் எனும்எண்ணத்தில் இருப்பது மிகவும் தெளிவாகிறது. அப்படி சிதறி, சுயநலன்களுக்காக செயற்படுவது அல்லாஹ்வின் எதிர்பார்ப்புக்கு மாற்றமானாதாகும். ஏனெனில்
"எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையை போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்." (சூரா ஸப்: 04) என்று அல்லா மிகவுமே தெளிவாக கூறிவிட்டான்.
எனவே, எமது பொதுத் தலைமைத்துவமான அகில இலங்கை ஜமிய்யதுள் உலமாவைப் பலப்படுத்தி அதனை மையப்படுத்தி செயற்படுவோம். இது தொடர்பாக ஜமிய்யதுள் உலமா அண்மையில் ஒரு முன்னெடுப்பு செய்துள்ளதாக அறிந்தேன். அல்ஹம்துலில்லாஹ். எனவே அதில் எமது முழுக் கவனத்தையும் செலுத்தி சமூகத்திற் நலனுக்காக் செயல்படுவோம், இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் எமது எண்ணங்களைத் தூய்மையாக்கி, செயற்பாடுகளில் அருள் செய்வானாக!
வஸ்ஸலாம்.
பாலஸ்தீன் விடயமாக எகிப்தும் துருக்கியும் ஒன்றுபட்டு களமிறங்கியதால் அல்லாஹ்வின் உதவி கிடைத்தது . அல்ஹம்து லில்லாஹ் . முழு முஸ்லிம் நாடுகளின் தலைமைகள் ஒன்றுபட்டால் எப்படி இருக்கும்?, அதே போன்று நம் நாட்டு முஸ்லிம்களும் உலமாக்களின் தலைமதத்துவத்தின் கீழ் ஒன்றுபட்டால் நிச்சயமாக அல்லாஹ்வின் ஒதவி கிட்டும். இதன் பின்னும் ஏமாற்றும் கோழைத்தனமான அரசியல் தலைமைகளை நம்பி நாம் ஏமாற முடியாது . அதேபோன்று இஸ்லாமிய அமைப்புக்களும் தத்தமது வேலையை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் . எனினும் தேசிய சமூக விடயத்தில் ஓன்று பட்டே ஆகணும் . அதுதான் நாம் செய்யும் முன்னெடுப்பாகும் .
ReplyDelete