Header Ads



பிள்ளைகளை 'குண்டு' என அழைக்காதீர்கள்..!



நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா, பருமனாக இருக்கும் குழந்தைகள் மெலிய வேண்டுமா? கொழுப்பு உணவுகளை தவிர்க்கிறீர்களோ இல்லையோ.. ‘டயட்’, ‘குண்டு’ ஆகிய வார்த்தைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கிறார் ஆஸ்திரேலிய டயட் நிபுணர். ஆஸ்திரேலியாவில் பருமன் குறைப்பு சிகிச்சைகளை அளிக்கும் நிறுவனம் ‘வெஸ்லி வெயிட் மேனேஜ்மென்ட் சென்டர்’. இதன் தலைமை நிபுணர் நிகோலா மூர் கூறியிருக்கும் அட்வைஸ்: 

பிள்ளைகள் குண்டாக இருப்பதாக பல பெற்றோர் புலம்புவார்கள். ‘குண்டு’ என்றே பலர் தங்களது பிள்ளைகளை அழைப்பார்கள். ‘சாப்பாட்டை குறை, நொறுக்கு தீனியை குறை’ என்று திரும்ப திரும்ப சொல்வார்கள். இது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும். 

ஆரோக்கியமான, கொழுப்பை அதிகரிக்காத உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மட்டுமே பிள்ளைகளை பெற்றோர் வலியுறுத்த வேண்டுமே தவிர, குழந்தைகள் குண்டு என்பதை சுட்டிக்காட்ட கூடாது. அவர்கள் கொழுப்புள்ள உணவுகள், தின்பண்டங்களை விரும்பி கேட்டால், ஒரேடியாக ‘சாப்பிட கூடாது’ என மறுக்காமல், கொழுப்பு சத்து குறைந்த வேறு தின்பண்டங்களை வாங்கி தரலாம். படிப்படியாக அவர்களது உணவு பழக்கத்தை மாற்றலாம். குழந்தைகள் உடல் பருமன் விஷயத்தை கவனமாக, நாசூக்காக கையாள வேண்டியது முக்கியம். 

மேலும், ‘டயட்.. டயட்’ என்பதை வலியுறுத்தினால், இயல்பான உணவு பழக்கத்தில் இருந்து விலகுகிறோம் என்ற மனஉளைச்சலும் கவலையும் அதிகமாகும். அதனால், தங்களது எடையை, பிள்ளைகளது எடையை குறைக்க விரும்புபவர்கள் ‘டயட்’, ‘குண்டு’ என்ற இரு வார்த்தைகளையும் சொல்லவே கூடாது.

No comments

Powered by Blogger.