Header Ads



உலகின் பெறுமதிமிக்க மாணிக்கக் கல்லுக்கு நளீம் ஹாஜியாரின் பெயர் சூட்டப்பட்டது


(Vi)

உலகின் பெறுமதிமிக்க மாணிக்கக் கல் ஒன்றுக்கு நளீம் ஹாஜியாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒனிக்ஸ் அன்லிமிடட் இன்டர்நெஷனல் எனும் மாணிக்கக்கல் சந்தைப்படுத்தல் நிறுவனமே இலங்கையின் புகழ் பெற்ற மாணிக்கக்கல் வியாபாரியும் ஜாமிஆ நளீமியாவின் ஸ்தாபகத் தந்தையுமாகிய நளீம் ஹாஜியாரின் பெயரைச் சூட்டியுள்ளது. 

ரூபி, சபயர், எமரல்ட் போன்ற உலகின் பெறுமதிமிக்க மாணிக்க வகைகளையும் விடவும் மதிப்புமிக்கதாக விளங்கும் அலெக்ஸான்ட்ரைட் வகை மாணிக்கக்கல் ஒன்றுக்கே 'நளீம் அலெக்ஸான்ட்ரைட்'  எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஒனிக்ஸ் அன்லிமிடட் இன்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நளீம் ஹாஜியார் அவர்களால் இரத்தினபுரி நகரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட குறித்த கல்லானது 2006 ஆம் ஆண்டு வரை அவரால் பாதுகாக்கப்பட்டதாகவும் பின்னர் பட்டைதீட்டப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டிருந்ததாகவும் குறித்த கல் தற்போது பல கோடி ரூபாய்களுக்கு விலை மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல நிறங்கள் மாறக் கூடிய குறித்த கல்லானது 19ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட அலெக்ஸான்டர் வகையைச் சார்ந்தது எனவும் குறித்த நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. 



2 comments:

  1. விலை மதிக்க முடியாத விலை மதிப்புக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு மா மனிதனின் பெயரை ஒரு கல்லுக்கு சூட்டியதால் அக்கல் பெருமை அடைகிறது.

    ReplyDelete
  2. "எனக்கு வல்ல அல்லாஹ் பொருளாதார செல்வத்தை அருளியிருக்கின்றான்...உங்களுக்கு கல்விச் செல்வத்தை அருளியருக்கின்றான்...நீங்கள் என்னுடன் சேர்ந்து எமது குழந்தைகளின் கல்வியை முன்னேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட முன்வராவிட்டால் நாளை கியாமத் நாளில் உங்களை நான் அல்லாஹ்விடம் காட்டிக் கொடுத்து விடுவேன்" என்று பகிரங்கமாக கூட்டமொன்றில் கூறியவர் தான் சகல மாணிக்கக் கற்களையும் விட மதிப்பு வாய்ந்த மாமனிதர் மர்ஹும் நளீம் ஹாஜியார் எனும் அந்த ஒப்பற்ற மாணிக்கம். அன்னாரின் கபுரை அல்லாஹ் என்றென்றும் ஒளிவீசச் செய்வானாக !!

    ReplyDelete

Powered by Blogger.