Header Ads



பலஸ்தீனுக்கு ஐ.நா.வில் பார்வையாளர் அந்தஸ்த்து கோரும் அப்பாஸுக்கு ஹமாஸ் ஆதரவு



(tn) பலஸ்தீனுக்கு ஐ.நா. வின் பார்வையாளர் நாடு அந்தஸ்தை கோரும் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் முயற்சிக்கு காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷால் ஆதரவை வெளியிட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ¤டன் தொலைபேசியின் மூலம் உரையாடிய காலித் மிஷால், ஐ.நா வில் பார்வையாளர் அந்தஸ்த்து நாட்டை பெறும் முயற்சியை ஹமாஸ் அமைப்பு வரவேற்பதாக கூறியுள்ளார்.

மஹ்மூத் அப்பாஸ் எதிர்வரும் 29 ஆம் திகதி பலஸ்தீனை ஐ.நா. பார்வையாளர் அந்தஸ்தை பெறுவதற்கான விண்ணப்பத்தை பொதுச் சபையில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த முயற்சிக்கு ஹமாஸ் அமைப்பு கடந்த வாரம் தமது எதிர்ப்பை வெளியிட்டது. ஆனால் காலித் மிஷால் மற்றும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் சபை உறுப்பினர் இஸ்ஸத் அல் ரஷ்க், அப்பாஸின் முயற்சிக்கு ஆதரவளித்துள்ளனர்.

மேற்குக் கரை, காசா மற்றும் கிழக்கு ஜெரூசம் எல்லையைக் கொண்ட பலஸ்தீனத்திற்கான பார்வையாளர் அந்தஸ்த்து கோரப்படவுள்ளது. ஆனால் பலஸ்தீனம் என்பது முழு இஸ்ரேலும் உள்ளடக்கியது என வலியுறுத்தி வரும் ஹமாஸ் அமைப்பு அப்பாஸின் தனிநாட்டு கோரிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் மஹ்மூத் அப்பாஸ் ஐ.நாவில் பார்வையாளர் அந்தஸ்தை கோருவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.